பத்துகேவஸ், நவ. 9-
வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்களும் தீபத் திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காகப் பேரின்பம் எனப்படும் மலேசிய புது இந்தியர் அறப்பணி இயக்கம் 9ஆவது முறையாக தமது சமுதாயப் பணியை முன்னெடுத்தது.
செலாயாங், பத்துமலை வட்டாரத்தில் வசதி குறைந்த குறிப்பாக அன்பு இல்லத்தைச் சேர்ந்த 30 குழந்தைகளுக்குத் தீபாவளி புத்தாடைகளை அன்பளிப்புகளையும் பேரின்பம் வழங்கியதாக அச்சங்கத்தின் செயலாளர் குபேரன் தெரிவித்தார்.
இதுவரையில் ஒட்டுமொத்தமாகக் கிட்டத்தட்ட 1000 வசதி குறைந்தவர்களுக்குத் தீபாவளி சமயத்தில் தங்களது இயக்கம் உதவி புரிந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
பேரின்பம் இயக்கத்தின் தோற்றனர் யு. தாமோதரன் தலைமையில் இந்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்தருணத்தில் வசதி குறைந்தவர்களையும் அன்பு இல்ல குழந்தைகளையும் அரவணைப்பது நமது கடமை என்பதை அவர் எப்போதும் உணர்த்தி வருகின்றார்.
அவரின் ஆலோசனையின் அடிப்படையிலும் ஆதரவின் வாயிலாகவும் இந்த தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டதாகக் குபேரன் கூறினார். உதவிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் பேரின்பம் இயக்கத்திற்கு தங்களின் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.


