Homeஉலகம்கோவிட்-19 பாதிப்பு : ஈரானில் 10 இலட்சத்தைத் தாண்டியது

கோவிட்-19 பாதிப்பு : ஈரானில் 10 இலட்சத்தைத் தாண்டியது

தேரான், திசம்பர் 4:-

ஈரானில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ ஈரானில் கோவிட்-19ஆல்பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,003,494 ஆக உள்ளது. மேலும் ஈரானில் கோவிட்-19ஆல் பலியானவர்களின் எண்ணிக்கை 49,348 ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசு அலுவலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சில ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஈரானில் சமீப நாட்களாக கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழையக் கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கோவிட்-19ஆல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கோவிட்-19ஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வடபகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருகிறது.

– தி இந்து (தமிழ்)

spot_img

latest articles

explore more