Homeஅரசியல்இந்து கோயில்கள் சட்டவிரோதம் என்று கூறுவது சட்டவிரோதம் - கெடா எம்ஏபி

இந்து கோயில்கள் சட்டவிரோதம் என்று கூறுவது சட்டவிரோதம் – கெடா எம்ஏபி

சுங்கைப்பட்டானி, திசம்பர் 3:-

மெர்டேக்காவிற்கு முன்பும் நாட்டின் அரசியல் சாசனம் வரையப்படுவதற்கு முன்பும் உருவான ஆலயங்கள் சட்ட விரோதமானவை என்று சொல்லும் கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நோர் விவரம் தெரியாதவராக இருக்கிறார் என்று மலேசிய முன்னேற்ற கட்சி-எம்ஏபி கெடா மாநில துணைத் தலைவர் ஏ.விவேக் தெரிவித்துள்ளார்.

பல இன, பல சமய மக்கள் வாழும் இந்த நாட்டின் வரலாற்றையும் இந்திய சமுதாயம் நாட்டிற்கு அளித்துள்ள பங்களிப்பையும் இதற்கு முன்பிருந்த அரசுகள் சீர்தூக்கிப் பார்த்த வேளையில் இன்றைய கெடா மந்திரி பெசாரும் அவரின் நிர்வாகத்தினரும் அவை பற்றி அறியாதவர்களாக உள்ளனர். அதனால்தான் இயந்திரங்களைக் கொண்டு இந்து ஆலயங்களை உடைத்து வருகின்றனர்.

“கெடாவில் தற்பொது அமைந்திருக்கும் ஆட்சி, சமய சகிப்புத்தன்மை இன்றி செயல்படுகிறது. எதையும் கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் நல்லிணக்க அடிப்படையில் அணுகாமல் தன்னிச்சையாக செய்யும் போக்கினால், இந்து சமுதாயம் மட்டும் பாதிப்புக்கு ஆளாகவில்லை; மற்ற சமயத்தினரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.”

மக்களிடையே நிலவும் பன்முகத் தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை காணும் போக்கு ஆகியவற்றை மதிக்காத போக்கு இன்றைய கெடா மந்திரி பெசாரிடம் காணப்படுகிறது.

இந்து ஆலயங்களையும் மற்ற வழிபாட்டு தலங்களையும் இடித்துத் தள்ளும் போக்கு தொடருமானால் அது ஒருமித்து வாழும் சமூகத்தில் வெறுப்பையும் பிரிவு மனப்பான்மையையும் ஏற்படுத்தும் என்று எம்ஏபி மத்திய செயலவை உறுப்பினருமான ஏ.விவேக் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

latest articles

explore more