Homeஇந்தியா/ ஈழம்2021 கோடை விடுமுறையில் 'வலிமை' வெளியீடு : பணிகள் தீவிரம்

2021 கோடை விடுமுறையில் ‘வலிமை’ வெளியீடு : பணிகள் தீவிரம்

சென்னை, திசம்பர் 5:-

ஜனவரிக்குள் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து, 2021 கோடை விடுமுறைக்கு வெளியிட ‘வலிமை’ படக்குழு முடிவு செய்துள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் படம் ‘வலிமை’. கோவிட்-19 அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதத்தில் ஐதராபாத்தில் தொடங்கிய படப்பிடிப்பில் அஜித்குமார் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகளின்போது அஜித்துக்குக் காயம் ஏற்பட்டது. ஆனாலும், அடுத்த நாளே படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதற்குப் பிறகே சென்னை திரும்பியது படக்குழு.

தற்போது, இதுவரை படமாக்கப்பட்ட அனைத்துக் காட்சிகளின் தொகுக்கும் பணிகளையும் முடித்துவிட்டது படக்குழு. இன்னும் எடுக்க வேண்டிய காட்சிகளையும் பட்டியலிட்டு, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டார்கள். இதையும் ஐதராபாத்திலேயே நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இதற்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் ஐதராபாத்துக்குப் பயணிக்கவுள்ளனர். இதனை ஒரே கட்டமாக ஜனவரிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

அடுத்த 3 மாதங்களில் இறுதிக்கட்டப் பணிகளை முடித்துக் கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் ஒருபுறம் படப்பிடிப்பு, மறுபுறம் இறுதிக்கட்டப் பணிகள் எனத் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது படக்குழு.

நன்றி – தி இந்து (தமிழ்)

spot_img

latest articles

explore more