Homeஅரசியல்டாக்டர் ரஃபிடா மீது பொய்ச் செய்தி தொடர்பாக புதிய சட்ட மாற்றம் பாயுமா ? –...

டாக்டர் ரஃபிடா மீது பொய்ச் செய்தி தொடர்பாக புதிய சட்ட மாற்றம் பாயுமா ? – லிம் கிட் சியாங் கேள்வி

கோலாலம்பூர் | மார்ச் 12

சிறுநீரக வல்லுநர் டாக்டர் ரஃபிடா அப்துல்லா மீது புதிய அவசரகால சட்டம் அவர் வெளியிட்டப் பொய்ச் செய்தி தொடர்பில் நடவடிக்கை எடுக்கப் பாயுமா என ஜ. செ. க. வின் மூத்த அரசியல் தலைவர் லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளாந்தான் மாநில அரசு செயலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக வரிசையை முந்திச் செல்ல முயற்சித்ததாக சாடி இருந்தார் டாக்டர் ரஃபிடா.

அவ்விவகாரம் தொடர்பில் மறுப்புத் தெரிவித்திருந்த கிளாந்தான் மாநில அரசு காவல்துறை புகாரையும் பதிவு செய்திருந்தது.

இதன் தொடர்பில் டாக்டர் ரஃபிடா மீது இன்று முதல் நடப்புக்கு வந்துள்ள அவசரகாலச் சட்டம் பொய்ச் செய்தி தொடர்பில் பாயுமா ? அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ? ரி.ம. 100,000 தண்டமோ அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறையோ அல்லது இரண்டுமே விதிக்கப்படுமா என லிம் கிட் சியாங் வினவியுள்ளார்.

கிளாந்தான் மாநில அரசு அந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தாலும், அம்மாநில சுகாதாரத்துறை கோவிட்-19 தடுப்பூசி பெறுவோர் பட்டியலை மறு சீரமைப்புச் செய்து வெளியிட்டிருந்தது. முதற்கட்ட கோவிட்-19 ஹடுப்பூசி பெறுவோர் பட்டியல் கடந்த மார்ச் 2ஆம் நாள் வெளியிடப்பட்டது.

அந்த மறு சீரமைக்கப்பட்டப் பட்டியல், வரிசையை முந்திச் சென்றதாகக் குற்றஞ்சாட்டப் பட்டப் பின்னர் மாற்றி அமைக்கப்பட்டதாக நம்பத்தகுதன் வட்டாரம் தெரிவித்ததை மலேசியாகினி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

அதன் தொடர்பில், தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவிக்கையில், தகவல் தெரிவிப்பவர்கள் பாதுகாக்கப்படுவர் எனக் கூறினார்.

நடப்புக்கு வந்துள்ள அவசர காலச் சட்டத்தின்படி கோவிட்-19 அல்லது அவசரகாலம் தொடர்பாகப் பொய்ச் செய்தியையோ அல்லது தவறானத் தகவலையோ வெளியிடுகிறவர்கள் மீது ரி.ம. 100,000 தண்டமோ அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறையோ அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

பொய்ச் செய்தியை வெளியிடுவோருக்கு அதனை மீட்டுக் கொள்ள 24 மணி நேர நோட்டிஸ் வழங்கப்படும். அல்லது ரி.ம. 100,000 தண்டம் விதிக்கப்படும்.

 

spot_img

latest articles

explore more