Homeகுற்றவியல்பங்சார் ஜாலான் தெலாவி கொலைக் குற்றவாளி கைது !

பங்சார் ஜாலான் தெலாவி கொலைக் குற்றவாளி கைது !

பங்சார் | மார்ச் 14:-

கடந்த இரு நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்ட பங்சார் ஜாலான் தெலாவி 2இல் நடந்த கும்பல் மோதலில் ஏற்பட்டக் கொலைக்குக் காரணமாக இருந்த ஆடவர் கைதானார்.

பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அனுவார் ஓமார் இவ்விவகாரம் குறித்துத் தெரிவிக்கையில், நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் பத்துமலை, செலாயாங் பாரு, ஜாலான் 11இல் சோதனை நடத்தப்பட்டதில் 26 வயது  மிக்க ஆடவர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டதாகவும் ஒரு விவேகக் கைப்பேசியையும் பறிமுதல் செய்ததாகவும் அவர் சொன்னார்.

தடுத்து வைக்கபட்ட ஆடவர் போதைப் பொருள் குற்றத்திலும் தொடர்புடையவராகவும் அறியப்படுகிறார்.

மேலும், இக்கொலை வழக்கில் தொடர்புடைய மற்றவர்களின் இருப்பிடம் குறித்தும் காவல்துறைக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அனுவார் குறிப்பிட்டார். அதன்படி மேற்கொண்ட சோதனையில் அவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் அவர் கூறினார்.குற்றவாளிகள் என நம்பப்படுவோர் அனைவரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்படுள்ளது.

முன்னதாக, பங்சார் ஜாலான் தெலாவி 2இல் நடந்த கைகலப்பில் சஞ்சீத் குமார் எனும் ஆடவர் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் விக்னேஸ்வரன் என்பவர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்த நிலையில் தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அநேகன் செய்தி வெளியிட்டது.

spot_img

latest articles

explore more