மலாக்கா | மார்ச் 15
இளைஞர், விளையாட்டுத் துறையின் துணையமைச்சர் அவையதிகாரி வான் ஃபஷால் அமகாட் கமால் கடந்த 13 மார்ச் 2021 அன்று மலாக்கா மாநிலத்திற்குச் சுற்றுலா மேற்கொண்டிருக்கையில், மலாக்கா மாநில மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் அவரோடு மகிழ்வுக் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்தது. அதோடு, இக்கூடலில் (Pingat Belia Bakti) எனும் விருதைப் பெற்ற நால்வர் சிறப்பிக்கப்பட்டனர். இவ்விருது, மலாக்கா மாநிலத் தலைமையமைச்சர் துன் ஶ்ரீ செத்தியா டாக்டர் ஹாஜி அலி பின் ருஸ்தாம் அவர்களால் வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்கள்:
- தனேஸ் பேசில் – மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் தேசிய தலைவர்
- ராஜரத்தினம் ராஜாஜி – மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் தந்தை
- சிவபாலன் முனியாண்டி – மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர்
- கேனத் வில்லியம் ஜோன் – மலாக்கா மாநில மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் துணைத்தலைவர்

இந்த நிகழ்ச்சியில் 25 மலாக்கா மாநில மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் உறுப்பினர்களும் செயலவை உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சிகள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் விதிமுறைக்குச் கீழ் நட்த்தப்பட்டது. மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் தேசியப் பொதுச் செயலாளர் திரு. ஜனகன் யோகேந்திர குமார் வருங்கால மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் திட்டங்களை விளக்கினார். திட்டங்கள் அனைத்தும் தலைவரின் சிந்தனையால் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார்.
மலாக்கா மாநில மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் தலைவருமான திரு. தனேஸ் பேசில் அவர்கள் மலாக்கா மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட, செயல்படுத்தவிருக்கும் திட்டங்களைப் பற்றித் தெரிவித்தார். செயல்படுத்தப்பட்டத் திட்டங்களனைத்தும் தான் தலைவரான 80 நாட்களில் நடந்தவை என விளக்கினார்.

வருகைப்புரிந்த மேலவையதிகாரி அவர்களும் தனது கருத்துகளைத் தெரிவித்தர். மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் இளைஞர்களையும் தலைமைத்துவத்தையும் இணைக்கும் பாலம் எனத் தெரிவித்தார். மலேசிய இளைஞர், விளையாட்டு அமைச்சு ம.இ.இ.ம திற்கு உதவியாய் இருக்கும் எனத் தெரிவித்தார்.


