Homeகலை உலகம்‘சிவந்து போச்சி நெஞ்சே’ தொடரின் குழுவினருடன் ஒரு சிறப்பு நேர்காணல்

‘சிவந்து போச்சி நெஞ்சே’ தொடரின் குழுவினருடன் ஒரு சிறப்பு நேர்காணல்

கோலாலம்பூர் | மார்ச் 31:-

நவீன் சாம்ராத், இயக்குநர்:

  1. இத்தொடரை இயக்குவதற்க்கான உங்களின் சில உத்வேகங்கள் யாவை?

ரசிகர்களை அதிர்ச்சியிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தும் இயல்பான நடைமுறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடரை இயக்க நான் விரும்பினேன். வெறும் பொழுதுபோக்கு அம்சத்தைத் தாண்டி, ரசிகர்களுக்கு ஒரு முக்கியக் கருத்து இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நம் சமூகத்தில் ஆதிக்கம் கொண்டிருந்தாலும் வெளிப்படையாகப் பேசப்படாத ஒரு சில விஷயங்களானத் திருமண விவகாரங்கள், பாலியல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதையை உருவாக்க என்னையும் எனது குழுவினரையும் ஊக்குவித்தது.

  • இத்தொடரை வெற்றிகரமாக இயக்கிய உங்களின் அனுபவம் பற்றி கூறுங்கள்?

முதலாவதாக, என்னைப் போன்ற ஒரு புதிய திறமையாளருக்கு இதுபோன்ற ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கிய ஆஸ்ட்ரோவுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். தைரியமான மற்றும் தனித்துவமானக் கதையை நாங்கள் வழங்கியுள்ளோம் என்று நம்புகிறேன். இது எனது முதல் தொடர் என்பதைக் கருத்தில் கொண்டு நான் ஒரு சில குறைபாடுகளை எதிர்பார்த்தேன். இருப்பினும், ஆஸ்ட்ரோவைச் சேர்ந்தப் பணியாளர்கள் எங்களுக்கு வழிகாட்டியதோடு, உதவினர் மற்றும் பொறுமையையும் கையாண்டனர். ஆயினும், எங்களிடமுள்ள வளங்களைக் பயன்படுத்தி எங்களால் இயன்றதை வழங்கியுள்ளோம். நல்ல, தொடர்புபடுத்தக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்கும் ஸ்கிரிப்ட்டுக்கு நேர்மையாக இருப்பதில் ஒரு குழுவாக, நாங்கள் உறுதியாக இருந்தோம். இப்பொழுது தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தரமான தயாரிப்புக்காக குழு முழு நேரமும் அயராது உழைத்தனர். எங்கள் தயாரிப்பாளர் திரு. ஆர். கமலன் கருத்துப்படிவத்தைப் (concept) பற்றிக் கேள்விப்பட்டவுடன் இந்தத் திட்டத்தில் ஆர்வமாக இருந்தார். மேலும், சித்தரிக்கப்பட்டச் சில சிக்கல்களை சரிபார்ப்பதில் அவர் முயற்சியும் எடுத்தார்.

  • இந்தத் தொடரில் ரசிகர்கள் எதை எதிர்பார்க்கலாம்?

சிவந்து போச்சி நெஞ்சே ஒரு சாதாரணக் கதை அல்ல. ஏனெனில், இதன் கருப்பொருள் சற்று உணர்திறன் (sensitive) மிக்கது. நாங்கள் இக்கதையை ஆஸ்ட்ரோவுடன் பகிர்ந்தபோது, ​​இக்கதை ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சற்று நிச்சயமற்றதாக இருந்தது. ஆனால், அவர்கள் இக்கதைக் கருவை ஏற்றுக்கொண்டது எங்களை மகிழ்ச்சிப்படுத்தியதோடு ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. நுட்பமான மற்றும் இயற்கையான நடிப்பு பாணியை வழங்கியதோடு, ஒரு கணிசமானக் கதைக்களத்துடன் ஒரு சிறந்த திரைக்கதையை நாங்கள் வழங்கினோம். இந்தத் தொடரின் மூலம், ரசிகர்கள் தங்களின் சக நண்பர்களுடன் இவற்றைப் போன்ற தலைப்புகளைப் பற்றி திறந்த மனதுடன் பேசுவார்கள் என்று நம்புகிறேன். மனம் திறந்து வெளிப்படையாக பேசுவதன் மூலம், ஒருவர் தீர்வுகளையும் தேடலாம்.

கிருத்திகா நாயர் & கர்ணன் ஜிகிராக், நடிகர்கள்:

  1. சிவந்து வந்து போச்சி நெஞ்சே தொடரில் உங்களின் கதாப்பாத்திரத்தைப் பற்றிக் கூறுங்கள்?

கிருத்திகா: அஞ்சனா, என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான, மிகவும் தைரியமான மற்றும் சவாலான ஒரு கதாப்பாத்திரமாகும். இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதன் மூலம், நேர்மறை மற்றும் எதிர்மறையானக் கருத்துக்களை நான் சமமாகப் பெறுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனாலும், நான் அஞ்சனாவாக நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏனெனில், இது எனது வாழ்க்கையில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. இது ஒரு கடினமான கதாபாத்திரம். நான் அஞ்சனாவின் ஆளுமைக் கோளாறு பிரச்சனையை மிகச் சரியாக வெளிக்கொணர வேண்டியிருந்தது. நான் அவ்வாறு செய்யாவிட்டால், அஞ்சனாவின் பல முடிவுகளும் செயல்களும் செவ்வனே வெளிக்கொணரப்படாது. இந்தக் கதாப்பாத்திரம் நிச்சயமாக என்னை பாதித்துள்ளது.

கர்ணன்: லிங்கேஷ் எனது கதாப்பாத்திரம். இயக்குநர் என்னை அணுகியபோது இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க நான் சற்று தயங்கினேன். ஆனால், பொழுதுபோக்குக்கு அப்பாட்ப்பட்டு ரசிர்களுக்கு ஒரு சில விஷயங்களைக் கற்ப்பிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். எனது கதாப்பாத்திரத்தில் ஒரு பாலியல் சுகாதார பிரச்சினை உள்ளதால் அதைச் சித்தரிப்பது மிகவும் சவாலாக இருந்தது. இருப்பினும், நான் எனது சிறந்ததை வழங்கினேன். இதுவரை ரசிகர்கள் வழங்கிய ஆதரவுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

  • இந்தத் தொடருக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?

கிருத்திகா: சிவந்து போச்சி நெஞ்சே ஒரு சாதாரணப் கதை அல்ல. ஏனெனில், நம் சமூகத்தில் வெளிப்படையாகப் பேசப்படாத ஒரு சில சிக்கல்களை நாங்கள் தைரியமாக சித்தரித்துள்ளோம். இத்தொடர் முதிர்ந்த ரசிகர்களை இலக்காகக் கொண்டது. எனவே, ரசிகர்கள் திறந்த மனதுடன் இத்தொடரைக் கண்டு களிக்க வேண்டும். அப்பொழுதுதான்,  அவர்கள் கதையைப் புரிந்துக் கொள்வதோடு அனைவரின் படைப்பையும் ரசிக்க முடியும்.

கர்ணன்: தொடர் மற்றும் திரைப்படங்கள் பொழுதுபோக்குக்காக மட்டுமில்லாமல் ஒரு கருத்தையும் நிலைநிறுத்த வேண்டும். இந்தத் தொடர் ஒரு அர்த்தமுள்ளக் கருத்தைத் தாங்கி மலர்கின்றது. மேலும், அதிகமான மக்கள் இதைப் பார்ப்பார்கள் என்றும் இதன்வழி, வலுவானக் கருத்துக்களைக் கொண்ட உயர் தரமான உள்ளடக்கத்தைத் தயாரிக்க உள்ளூர் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஊக்கமளிப்பார்கள் என்றும் நம்புகிறேன்.

spot_img

latest articles

explore more