Homeமலேசியாதடுப்பூசிக்கு எதிரான முன்னெடுப்பில் அரசு ஊழியர்கள் ஈடுபட வேண்டாம் ! - தான் ஶ்ரீ ஸூக்கி...

தடுப்பூசிக்கு எதிரான முன்னெடுப்பில் அரசு ஊழியர்கள் ஈடுபட வேண்டாம் ! – தான் ஶ்ரீ ஸூக்கி அலி

கோலாலம்பூர் | ஏப்ரல் 1:-

தடுப்பூசிக்கு எதிரான முன்னெடுப்பில் அரசு ஊழியர்கள் ஈடுபட வேண்டாம் என நாட்டின் தேசியத் தலைமைச் செயலாளர் தான் ஶ்ரீ ஸூக்கி அலி நினைவுறுத்தியுள்ளார்.

அவ்விவகாரம் தொடர்பில் வதந்திகளையோ அல்லது செய்திகளையோ வெளியிடும் தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆதன் விளைவாக இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது தண்டமோ அல்லது இவ்விரண்டுமோ விதிக்கப்படலாம் என அவர் விளக்கினார்.

இன்று புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் துறையின் 2020ஆண்டுக்கான சிறந்த சேவையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தான் ஶ்ரீ ஸூக்கி அலி தெரிவித்தார்,

அதே வேளையிம் மைசெஜாத்தெரா செயலி வழி அனைத்து அரசு ஊழியர்களையும் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் பங்குகொள்ள அழைப்பு விடுத்தார்.

கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தால் அப்ப்ருந்தொற்றுப் பரவுவதில் இருந்து தடுக்க முடியும் என நான் நம்புகிறேன்.

அதனால் நாம் எல்லோரும் வழக்கு நிலைக்கு மிக விரைவில் திரும்ப அது வழி செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more