கோலாலம்பூர் | ஜூன் 7 :-
உற்பத்தித் துறையில் பணி புரியும் ஊழியர்கள் மைசெஜாத்தெரா செயலியில் தங்களின் சுய விவரங்களைப் புதுப்பிக்கைவில்லை என்றால் அவர்களுக்கு தண்டம் விதிக்கப்படலாம்.
மேலும், தங்களின் வேலையிடத்தினுள் நுழையும் முன்னர் மைசெஜாத்தெராவில் தங்களின் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யாமல் இருந்த பேரா மாநிலத்தைச் சேர்ந்த 31 ஊழியர்களுக்கு ரி.ம. 1,500 முதல் ரி.ம. 2,000 வரையில் தண்டம் விதிக்கப்பட்டதாக ஹாரியான் மெட்ரோ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து மஞ்சோங் மாவட்டக் காவல்துறை தலைவர் நோர் ஓமார் சாப்பி, அவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டவர்களில் 29 பேர் எரிபொருள் ஆலையைச் சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கோழி தொழிற்சாலையைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்டார்.
இந்நடவடிக்கை பொது மக்களிடையே பல்வேறானக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த விதிமுறை உற்பத்தித் துறையில் பணி புரிகிறவர்களுக்கு மட்டும் பொருந்தும். இது பொது மக்களுக்குக் கட்டாயமான விதிமுறை அல்ல.
ஆனால், விருப்பமுள்ளவர்கள் தங்களீன் சுய விவரத்தை மைசெஜாத்தெராவில் புதுப்புத்துக் கொள்ளலாம்.
கோவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள், வெளிநாட்டுப் பயணம், தொற்று கண்டவர்களுடனான தொடர்பு போன்ற விவரங்கள் அச்செயலி வாயிலாகக் கேட்கப்படும்.


