ஜோகூர் பாரு | ஜூன் 7 :-
கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள வெகு தூரம் இருப்பதால் இன்னும் அதிகமான தடுப்பூசி மையங்கள் திறாக்கப்பட வேண்டும் என ஜோகூர் மாநில நம்பிக்கைக் கூட்டணி வலியிறுத்தியுள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொள்ள சில 60 கிமீ.க்கும் அதிகமாக பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எடுத்துக் காட்டாக, லாபிசில் தடுப்பூசி மையம் இல்லாதக் காரணாத்தால் சிகாமாட் வரையில் ஏறத்தாழ 60 கி.மீ. வரை பயணிக்க வேண்டியுள்ளது.
அதே போலத்தான் யோங் பெங்கில் இருந்து பத்து பகாட் தடுப்பூசி மையத்துக்கும், பாலோவில் இருந்து குளுவாங் தடுப்பூசி மையத்துக்கும், கெமாஸ் பாருவில் இருந்து பூலோ காசாப்க்கும் ஏறத்தாழ 60 கி.மீ. வரையில் பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டறிக்கையை ஜோகூர் மாநில நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் ஷேட் இப்ராஹிம் ஷேட் நோர், ஜோகூர் மாநில ஜ.செ.க.வின் தலைவர் லியூ சின் தொங், ஜோகூர் மாநில அமானா கட்சியின் தலைபர் அமினோல்ஹுடா ஹசான் ஆகியோர் இணைந்து வெள்யிட்டிருந்தனர்.
இது பலருக்கு சில சிக்கலை ஏற்படுத்தி இருந்தது. மேலும், பலர் இந்த சிக்கலால் தங்களின் நேர்முகச் சந்திப்புக்குச் செல்ல முடியாமல் தவற விட்டிருந்தனர்.
தடுப்பூசி மையங்கள் அதிகப்படுத்தினால், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் திட்டம் துரிதப்படுத்தப்படும் எப அவர்கள் தெரிவித்தனர்.


