மீரி | ஜூன் 8 :-

சரவாக் மாநில பெத்திங் பத்திங்கி அலி கடற்பகுதியில் சீன நாட்டிற்குச் சொந்தமான கண்காணிப்புக் கப்பல் உலா வந்துள்ளது.

கடந்த 16 நாட்களுக்கு முன்னர் சீன நாட்டின் வான்படைக் கப்பல் மலேசிய எல்லைப் பகுதிக்குள் நுழைந்த சம்பவத்திற்குப் பிறகு இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளது.

மீரி பட்டணத்தில் இருந்து ஏறத்தாழ 155 கி.மீ தூரத்தில் கடந்த ஜூன் 4 ஆம் நாள் அந்தக் கண்காணிப்புக் கப்பல் மலேசியக் கடற்பகுதியில் நுழைந்துள்ளது.

இது குறித்து தமது தரப்பு விவரம் அறிந்திருப்பதாகவும் மலேசியக் கடற்படை அதனை மிக அணுக்கமாக கவனித்து வருவதாகவும் மிரி கடற்படைசெயலாக்க நிறுவனத்தின் இயக்குநர் முகம்மட் ஃபௌஸி ஓதாம் குறிப்பிட்டார்.