கோலாலம்பூர் | ஜூன் 17 :-
Undi18 எனும் நகர்வைச் சேர்ந்த 18 இளைஞர்கள் அரசாங்கத்திடம் வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது இவ்வாண்டு ஜூலையில் நடப்புக்கு வர வேண்டும் எனும் வலியுறித்தலை தொடர்ந்து முன்வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
அந்த அனுமதியை கோலாலம்பூர் உயர் நீதிமன்றா நீதிபதி அகமட் கமால் முகம்மட் ஷாஹிட் இன்று வழங்கினார்.
கடந்த ஏப்ரல் 2ஆம் நாள் வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டு சட்டத்தை நடப்புக்குக் கொண்டுவர இளைஞர் குழுவினர் ஒன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
18 வயது நிரம்பிய ஒருவரை வாக்காளராக தானியங்கி முறையில் பதிவு செய்யப்படும். ஆனால், அது ஒத்திவைக்கப்பட்டது.
இதனால், இவ்வாண்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் 18 வயது முதல் 20 வயது வரையில் உள்ள 1.2 மில்லியன் இளைஞர்கள் வாக்களிக்கும் உரிமையை இழப்பர்.
கடந்த மே 2 ஆம் நாள், இவ்வாண்டிலேயே மிக விரைவில் 18 வயது வாக்களுக்கும் சட்டத்தை நடப்புக் கொண்டு வர அரசு உறுதியளிப்பதாக பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.


