கோலாலம்பூர் | 27-6-2021 :-
நாடு தற்பொழுது மூன்றாம் கட்ட நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணையில் இருக்கின்ற வேளையில் அதன் இறுதி நாள் நாளை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதமர் தான் ஸ்ரீ மகியாதீன் முகம்மது அறிவித்த தேசிய மீட்சித் திட்டத்தின் வரையறையின்படி, அது சாத்தியமாகாது என அவர் கூறியுள்ளார்.
அதன்படி, கோவிட்-19 அன்றாட நேர்வுப் பதிவு 4,000க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே தேசிய மீட்சொத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குச் செல்ல முடியும்.

மேலும், மற்ற வரையறைகளான மலேசிய மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்; தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகளின் எண்ணிக்கை மிதமான அளவில் இருக்க வேண்டும் போன்றவைகளும் அடைந்தால் தான் தேசிய மீட்சொத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குச் செல்ல முடியும்.
இதனைத் தொடர்ந்து, மேலும் முழுமையான உதவித் திட்டங்களை அரசு திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமையில் அறிவிக்கும் எனவும் பிரதமர் மகியாதீன் குறிப்பிட்டார்


