Homeகுற்றவியல்2019 முதல் 2021 மே வரையில் 1,000 தற்கொலைகள் ! பெரும்பான்மையோர் 15 முதல் 18...

2019 முதல் 2021 மே வரையில் 1,000 தற்கொலைகள் ! பெரும்பான்மையோர் 15 முதல் 18 வயதினர் !

கோலாலம்பூர் | 1/7/2021 :-

கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு மே மாதம் வரையில் மலேசியாவில் 1,000க்கும் மேற்பட்டத் தற்கொலைகள் நேர்ந்துள்ளது. அதில் பெரும்பான்மையாக (872 பேர்) 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என அரச மலேசியக் காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின்படி, ஜொகூர் மாநிலத்தில் 2019 முதல் 2020 வரையில் மட்டுமே 101 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.

இவ்வாண்டு சனவரி முதல் மே வரையில் சிலாங்கூர் அதிகப்படியானத் தற்கொலைகள் (117) பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்ற விசாரணைப் பிரிவு இயக்குநர் அப்துல் ஜலில் ஹசான் தெரிவிக்கயில், 2019 முதல் இவ்வாண்டு மே மாதம் வரையில் சராசரியாக நாள்தோறும் தற்கொலஒச் சம்பவங்கள் நடப்பதாகத் தெரிவித்தார்.

2019 ஆம் நாண்டில் 609 நேர்வுகளும், 2020இல் 631 நேர்வுகளும், கடந்த சனவரி முதல் மே மாதம் வரையில் மட்டுமே 468 நேர்வுகளும் பதிவாகியுள்ளன.

பதிவாகிய மொத்த தற்கொலை எண்ணிக்கையான 1,708 நேர்வுகளில் ஆண்களைக் காட்டிலும் (281 நேர்வுகள்) பெண்கள் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதன் எண்ணிக்கை 1,427 ஆகும்.

15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 872 பேர் தற்கொலை செய்துள்ளனர். மொத்த எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. 19 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் 886 பேர் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்பப் பிரச்சனை, அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், பொருளாதார நெருக்கடி ஆகிய மூன்று முக்கியக் காரணங்கள் இது போன்ற தற்கொலைச் சம்வங்கள் நடப்பதற்குத் தூண்டுகோளாக உள்ளன என காவல்துறை கூறுகிறது.

 தகவல்களின் அடிப்படையில், தற்கொலைச் சம்பவங்கள் ஏற்படுவதிலிருந்து குறைக்க சமுதாயமும் தனது பங்கினை அளிக்க வேண்டும்.

பொருளாதாரம், சுகாதாரம், மன அழுத்தம், குடும்பப் பிரச்சனை போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் நபர்களுக்கு குடும்பத்தாருஜ் நெருங்கிய நண்பர்களும் முடிந்த வரையில் உடனடியாக கவனித்து அதற்கான உதவியைச் செய்ய வேண்டும்.

ஒரு வேளை, உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவருக்கோ இது போன்ற பிரச்சனைகள் இருக்குமென்றால், அல்லது தற்கொலைக்கான எண்ணம் ஏற்படுகிறதென்றால், உடனடியாக பின்வரும் தரப்பினரைத் தொடர்பு கொண்டு உரிய உதவியைப் பெருமாறும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Pusat Kaunseling Agape Malaysia
– 03-77855955 அல்லது 7781 0800

The Befrienders (https://www.befrienders.org.my/)
– 03-79568144 அல்லது 03-79568145

Life Line Association Malaysia
– 03-42657995

spot_img

latest articles

explore more