கோலாலம்பூர் | 1-7-2021 :-
சிலாங்கூர் – கோலாலம்பூரில் உள்ள சில பகுதிகளில் 3/7/2021 முதல் 16/7/2021 வரையில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்படுகிறது எனத் தற்காப்புக்கான மூத்த அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அப்பகுதிகளில் சிலாங்கூர் மாநிலத்தில் எந்தெந்த பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்படும் எனும் பட்டியலைக் காண்போம் !
- பெட்டாலிங் மாவட்டம் : பெட்டாலிங். டாமான்சாரா, சுங்கை பூலோ, புக்கிட் ராஜா
- உலு லாங்காட் மாவட்டம் : உலு லாங்காட், அம்பாங், செராஸ், காஜாங், செமினி, பெரெனாங்
- சிப்பாங் மாவட்டம் : டெங்கில், லாபு, சிப்பாங்
- கோம்பாக் மாவட்டம் : பத்து, ரவாங், செத்தாப்பாக், உலு கிள்ளான், குவாங்
- கோலா லாங்காட் மாவட்டம் : தஞ்சோங் 12 (1), தஞ்சோங் 12 (2), தெலுக் பங்லிமா காராங், மோரிப், பண்டார், ஜுக்ரா, பத்து
- கிள்ளான் மாவட்டம் : காப்பார், கிள்ளான்
- கோலா சிலாங்கூர் மாவட்டம் : ஈஜோக், பெஸ்தாரி ஜெயா, ஜெராம்
- உலு சிலாங்கூர் மாவட்டம் : செரெண்டா, ராசா, Daerah Hulu Selangor உலு யாம், பத்தாங் காலி

கோலாலம்பூரில் சில பகுதிகள் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்படும்.
- ∙ Projek Perumahan Rakyat (PPR) Sri Semarak
- ∙ Projek Perumahan Rakyat (PPR) Batu Muda
- ∙ Flat Seksyen 2 Wangsa Maju
- ∙ Flat Seksyen 1 Wangsa Maju
- ∙ Kampung Padang Balang
- ∙ Taman Koperasi Polis (Fasa 1 & 2)
- ∙ Flat Sri Sabah
- ∙ Kampung Puah
- ∙ Projek Perumahan Rakyat (PPR) Kampung Baru Air Panas
- ∙ Flat Desa Pandan (termasuk Baiduri & Delima)
- ∙ Kampung Batu Muda
- ∙ Projek Perumahan Rakyat (PPR) Kerinchi
- ∙ Bandar Baru Sentul
- ∙ Taman Ikan Emas

மேற்கண்டப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்படும் எனவும் அதற்கு தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை ஒருங்கிணைக்கும் செயற்குழு உறுதியளித்துள்ளது எனவும் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் – கோலாலம்பூர் பகுதிகளில் நிலைமை சற்று மோசமடைந்துள்ளது எனவும் மூன்று புதிய வீரியம் கொண்ட கிருமித் தொற்றுப் பரவல் இங்கே அதிகமாக இருக்கிறது எனவும், ஆகையால், இங்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட வேண்டியக் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் மிக அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கண்டப் பகுதிகளில் எந்தெந்த நடவடிக்கைகளுக்கு அனுமதி உண்டு ? என்னென்ன செய்யக் கூடாது ? தெரிந்து கொள்வோம் !
- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்ட எல்லாப் பகுதிகளும் முடக்கம் காணும். அதனை அரச மலேசியக் காவல் துறை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.
- இப்பகுதிகளில் உள்ள பொது மக்கள் தங்களில் வீட்டிலிருந்து வெளியில் வர அனுமதி இல்லை. வீட்டிற்கு ஒருவர் மட்டுமே தேவையான அடிப்படைப் பொருட்களை வாங்க வெளியில் வரலாம். 10 கி. மீ. சுற்று வட்டார தூரம் வரையில் மட்டுமே செல்ல அனுமதி உண்டு.
- சுகாதார அமைச்சு இப்பகுதிகளில் உள்ள அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனையை நடத்தும்.
- மாவட்டத்தை அல்லது மாநிலத்தைக் கடந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென்றால், அதற்கான MySejahtera தகவல்களைக் காண்பிக்க வேண்டும்.
- இப்பகுதிகளில் உள்ள வானூர்தி நிலையங்களும் துறைமுகங்களும் வழக்கம் போல் இயங்கும்.
- தொடர்வண்டி, பேருந்து, வானூர்தி, வாடகை வண்டி போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகள் வழக்கம் போல் இயங்கும். 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- வாடகை வண்டியில் ஓட்டுநருடன் இருவருக்கு மட்டுமே பயணிக்க அனுமதி.
- காவல் துறை அனுமதி இல்லாமலோ அல்லது அவரச தேவை இல்லாமலோ இரவு 8.00 மணிக்கு மேல் வீட்டிற்கு வெளியில் வர யாருக்கும் அனுமதி இல்லை,
- அவசியத் தேவைக்கானச் சேவைகள் மட்டுமே காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இயங்க அனுமதி.
- அவசியத் தேவைப் பொருட்களான அரிசி, வெதுப்பி (ரொட்டி) சீனி, சமையல் எண்ணெய், கோதுமை மாவு.பால், குழந்தைகளுக்கானப் பால்,மருந்துகள், முகக்கவரி போன்றவைகளைத் தயாரிக்கும் ஆலைகள் வழக்கம் போல் இயங்கலாம்.
- தேவையான அவசிய சேவைகள், அரசாங்க வேலைகள் போன்றவற்றை மேற்கொள்ளும் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதி உண்டு. அதற்கான கடிதத்தையோ அல்லது வேலை அட்டையையோ காண்பிக்க வேண்டும்.
- அவசிய சேவையைத் தவிர்த்து மற்றவர்கள் கடுமையாக்கப்பட்ட நடமாட்டப் பகுதிகளில் வெளியில் நடமாட அனுமதி இல்லை. இதனை முதலாளிகள் மதித்து தங்களின் ஊழியர்களை வீட்டிலிருக்க அனுமதிக்க வேண்டும்.
- அவசிய சேவைகள், அவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அனுமதிக்கப்பட்ட இதர வணிகங்கள் இயங்க MITIயின் முந்தைய அனுமதிக் கடிதத்தைப் பயன்படுத்தலாம்.
- உணவுக் கடைகள் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இயங்க அனுமதி. உணவைப் பொட்டலாமாக மட்டுமே விற்க முடியும்.
- பல சரக்குக் கடைகள், அடிப்படைத் தேவைக்கானப் பொருட்களை விற்கும் கடைகள் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இயங்க அனுமதி.
- மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருத்துவ ஆய்வுக் கூடங்கள் தங்களின் உரிமத்தின் அடிப்படையிலோ அல்லது 24 மணி நேரமோ இயங்க அனுமதி.
- மருந்துக் கடைகள், மருந்தகங்கள், விலங்குகள் கிளினிக்குகள், செல்லப் பிராணிகளுக்கான உணவுகள் விற்கும் கடைகள் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இயங்க அனுமதி.
- எரிபொருள் – பெட்ரோல் நிலையங்கள் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இயங்க அனுமதி. சுங்கச் சாவடிக் கட்டணம் உள்ள நெடுஞ்சாலைகளில் எரிபொருள் – பெட்ரோல் நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம்.
- மொத்தச் சந்தைகள் நள்ளிரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இயங்க அனுமதி.
- பொதுச் சந்தைகள், MyFarm சந்தைகள் காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இயங்க அனுமதி.
- விளையாட்டு, பொழுது போக்கு, சமூக நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட அனுமதிகளும் விதிமுறைகளும் முழு எஸ்.ஓ.பி.யின் முக்கிய அங்கங்கள் ஆகும்.
மேல் விவரங்களுக்கு https://www.mkn.gov.my எனும் இணையத்தளத்தை வலம் வரலாம்.


