Homeமலேசியாகோவிட்-19 : வியாழக்கிழமை வரை டுரியான் துங்கால் காவல் நிலையம் மூடப்படும் !

கோவிட்-19 : வியாழக்கிழமை வரை டுரியான் துங்கால் காவல் நிலையம் மூடப்படும் !

ஆலோர் காஜா | 19/7/2021 :-

இன்று பிற்பகல் 2.00 மணி முதல் மலாக்கா, டுரியான் துங்கால் காவல் நிலையம் 4 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது என ஆலோர் காஜா மாவட்டக் காவல் துறைத் தலைவர் சூப்ரிட்டெண்டண்ட் அர்ஷட் அபு தெரிவித்தார்.

அக்காவல் நிலையத்தின் சில அதிகாரிகளுக்குக் கோவிட்-19 தொற்று பீடித்திருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை வரை மூடப்பட்டுள்ளதாக அர்ஷட் அபு தெரிவித்துள்ளார்.

மாவட்ட – மாநில் எல்லையைக் கடக்கும் அனுமதி உட்பட அக்காவல் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அனைத்துப் பணிகளை ரும்பியா, காடேக், மாச்சாப் பாரு ஆகியக் காவல் நிலையங்களிலோ அல்லது அருகில் உள்ளா வேறு காவல் நிலையங்களிலோ மேற்கொள்ள பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டுரியான் துங்கால் காவல் நிலையத்திற்குக் கீழ் செயல்படுத்தப்படும் குற்றத்தடுப்பு சுற்றுப் பணிகள் யாவும் எவ்விதத் தடையும் இன்றி தொடர்ந்து நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

டுரியான் துங்கால் காவல் நிலைய அதிகாரத்திகு உட்பட்ட விவகாரங்கள் – உதவிகள் தொடர்பாக அப்பகுதி பொது மக்கள் 06-5564153 /06-5566573 எனும் 24 மணி நேரச் சேவை எண்களின் வழி ஆலோர் காஜா மாவட்டக் காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

spot_img

latest articles

explore more