கோலாலம்பூர் | 21/7/2021 :-
கடந்த வியாழக்கிழமை பிரதமர் மகியாதீன் முகம்மது யாசின் தொடங்கி வைத்த தேசிய பரிவுமிக்க உணவுக் கூடை உதவித் திட்டத்தைப் பொது மக்கள் விண்ணபிக்க மகளிர், குடும்ப, சமூக நல மேம்பாட்டு அமைச்சு மூன்று கூடுதல் அழைப்புச் சேவை எண்களை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய அமைச்சர் ரீனா முகம்மட் ஹசான், சமூக நலத் திணைக்களத்திற்குக் கிடைக்கப்பெற்ற அதிக விண்ணப்பத்தால் இது ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அந்தக் கூடுதல் அழைப்புச் சேவை எண்கள் :
03-8323 2176
03-8323 2177
03-8323 2178
அந்த அழைப்புச் சேவை எண்களைத் தவிர்த்து கூகிள் பாரம் Google Form வாயிலாகவும் விண்ணப்பம் செய்யலாம், அதனைப் பெற 017-729702 என்ற எண்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்விரண்டு விண்ணப்ப முறையும் நேற்று நண்பகல் 12.00 மணி தொடங்கி செயல்படுகிறாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 108 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சமூக நலத் திணைக் களத்தின் செயலகத்தின் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
தானியான் காசி Talian Kasih 15999 அல்லது புலனம் வாயிலாக 019-2615999 எனும் எண்களிலும் அமைச்சின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களை நாடியும் அவ்விண்ணப்பத்தை அனுப்பலாம் என மேலும் குறிப்பிட்டார்.
நேற்றூ தொடங்கப்பட்ட அந்தக் கூடுதல் அழைப்புச் சேவை எண்களுக்குப் பிறகு நெகிரி செம்பிலான், சபா, சரவாக், சிலாங்கூர், பெர்லிஸ், கிளந்தான், கெடா, பேரா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் இருக்கும் 1,355 குடும்பங்களுக்கு உணாவுப் பொருட்கள் அடங்கிய அந்த உத்விக் கூடைகள் அனுப்பப்பட்டுள்ளது எனவும் இதனால் 4,467 குடும்ப உறுப்பினர்கள் பலனடைந்ததாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், சமூக நலத் தினைக்களத்தின் கீழ் தேசிய பரிவுமிக்க தொண்டூழியர் அணியின் 3,487 பேர் இணைந்ததாகவும் இந்த உதவித் திட்டத்தை தேவைப்படுவோருக்குக் கொண்டு செல்லும் பணியை மேற்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் சொன்னார்.


