கோலாலம்பூர் | 27/7/2021 :-

கடந்த ஜூலை 21 முதல் கஜூலை 25 வரை 2,200க்கும் மேற்பட்ட தண்டங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாடாளுமன்றா சிறாப்பு அமர்வின் இரண்டாம் நாளில் தெரிவித்துள்ளார்.

 ஊரடங்குச் சட்டம் கடந்த 21 ஜூலை நீக்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சட்டப்படி அந்தத் தண்டங்கள் செல்லுபடியாகுமா ஆகாதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

தொற்றுநோய் தடுப்பு – கட்டுப்பாட்டு சட்டம் அல்லது சட்டம் 342இன் படி கோவிட்-19 எஸ்.ஓ.பி.யை மீறியது தொடர்பில் விதிக்கப்பட்ட தண்டங்கள் ஊரடங்குச் சட்டத்திற்குத் தொடர்பில்லை.

இருந்தும், சட்டம் 342இன் படி விதிமீறல் செய்யும் தனி நபருக்கு விதிக்கப்பட்ட ரி.ம. 1,000 தண்டம் ஊரடங்கு சட்டத்தின்படி ரி.ம. 10,000 ஆக உயர்த்தப்பட்டது. மேலும், நிறுவனங்கள் அக்குற்றத்தைப் புரிந்தால், ரி.ம. 50,000 ஆக உயர்த்தப்பட்டது.

ஒரு வேளை ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு விட்டால், ஜூலை 21 முதல் விதிக்கப்பட்ட தண்டங்கள் யாவும் ரி.ம. 1,000க்கும் மேற்போகாதவையாக இருக்க வேண்டும்.

அந்தக் காலக் கட்டத்தில் நாள் ஒன்றூக்கு விதிக்கப்பட்ட தண்டங்களின் மதிப்பை துணஐப் பிரதமர்  இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவிக்கவில்லை.

அதே சமயம், நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டங்கள் குறித்தும் துள்ளியமாகத் தெரிவிக்கவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு, கோத்தா கினாபாலுவில் உள்ள மனமகிழ் மையத்தில் விதிமீறல் குற்றத்திற்காக 50 பேருக்குத் தலா ரி.ம. 5,000 விதிக்கப்பட்டது என நேற்று மெட்ரோ நாளிதழ் செய்தி வெளியிட்டது.

அந்த மன மகிழ் மையத்தை நடத்துபவருக்கு ரி.ம. 25,000 விதிக்கப்பட்டது. அவ்வனஐத்து தண்டங்களும் சட்டம் 342 இன் படி விதிக்கப்பட்டது.

இதனிடயே, பினாங்கு மாநிலத்தில் கடந்த 23/7/2021ஆம் நாள் தியாகத் திருநாளில் எஸ்.ஓ.பி. மீறியதற்காக 25 வங்காளதேசிகளுக்கு தலா ரி.ம. 5,000 தண்டம் விதிக்கப்பட்டது.

விதிக்கப்பட்ட அத்தண்டங்கள் யாவும் சட்டம் 324 இன் படி ரி.ம. 1,000க்கும் மேலானவையே.

விதிக்கப்பட்ட தண்டங்கள் மட்டும் இன்று நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ஊரடங்கு சட்டம் தொடர்பிலும் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இது வரையில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதாக எந்த அறிவிப்பும் அரசாங்கத்தால் கொடுக்கப்படவில்லை.

அதே நேரத்தில் ஊரடங்கு சட்டம் நாடாளுமன்றத்தாலும் நீக்கப்படவில்லை.