Homeஅரசியல்குறிப்பிட்ட சில அதிகாரங்களுடன் இடைக்கால அரசாங்கம் ! – அம்னோ பரிந்துரை

குறிப்பிட்ட சில அதிகாரங்களுடன் இடைக்கால அரசாங்கம் ! – அம்னோ பரிந்துரை

கோலாலம்பூர் | 30/7/2021 :-

நாட்டின் பொருளாதாரத்தையும் சுகாதாரத்தையும் நிர்வகிக்கவும் 15வது பொதுத் தேர்தலுக்கு நாட்டைத் தயார் செய்யவும் குறிப்பிட்ட சில அதிகாரங்களை மட்டும் கொண்ட ஓர் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என அம்னோ பரிந்துரைத்துள்ளது.

பொதுத் தேர்தலின்போது அவ்வரசாங்கம் செயல் இழந்து விடும் என அம்னோவின் துணைத் தலைவர் காலிட் நோர்டின் கூறியுள்ளார்.

அந்த இடைப்பட்டக் காலத்தில் நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் எனவும் சமூக ஊடகங்கள் உட்பட ஊடகத்துறையின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு அரசாங்கத்தின் ஒவ்வொரு செலவும் முடிவுகளும் நாடாளுமன்றத்தின் விவாதிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.

spot_img

latest articles

explore more