Homeஅரசியல்மறைந்த செனட்டர் டத்தோ எம். சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

மறைந்த செனட்டர் டத்தோ எம். சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

செமினி | 19/9/2021 :-

தமது வாழ் நாள் முழுவதும் ஐ.பி.எப் கட்சி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட டத்தோ எம். சம்பந்தன் அவர்களின் மறைவு ஐ.பி.எப் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத மிகப் பெரிய இழப்பாகும்.

இரண்டு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும், கடந்த பத்து ஆண்டுகள் ஐ.பி.எப் கட்சியின் தேசியத் தலைவராக அவர் ஆற்றியத் தொண்டு, அவர் செய்த நற்செயல்கள், அவரின் தலைமைத்துவ ஆற்றல் என்றும் மறையாது.

அவர் மக்கள் சேவையில் மிகுந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் உடையவர். பொது வாழ்விலும் தனி வாழ்விலும் கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து வழிகாட்டியவர். கட்சி பாகுபாடின்றி அனைவராலும் அன்பு பாராட்டப்பட்டார்.

மக்கள் தொண்டராகத் தன்னை வளர்த்துக் கொண்ட டத்தோ எம். சம்பந்தன் அனைவரிடமும் அன்பாகவும், பாசமாகவும் பழகக் கூடியவர். பிற அரசியல் கட்சியினருடனும் பொது அமைப்புடனும் நல்ல தொடர்பும், உறவும் கொண்டு செயல் ஆற்றியவர்.

அவரின் இழப்பு ஐ.பி.எப் கட்சிக்கு குறிப்பாக அடிமட்ட இந்திய சமுதாயத்திற்கும் பேர் இழப்பாகும்.

அன்னவரை இழந்து துயருறும் அவரின் மனைவி டத்தின் மு. ஜெயலட்சுமி, மகன்கள், மகள், உறவினர்கள், ஐ.பி.எப். கட்சி தொண்டர்களுக்கும் ஐ.பி.எப் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வருத்தத்துடன்

ஐ.பி.எப் தலைமையகம்.

spot_img

latest articles

explore more