கோலாலம்பூர் | 16/12/2021 :-
அடுத்து வர இருக்கக் கூடிய கிறிஸ்துமஸ் பண்டிகை, 2022 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என அரசு முடிவு செய்துள்ளது.
பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவிலும் குடும்பத்தாருடனும் கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.
மலேசியாவில் 2 வது ஓமைக்ரோன் சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசாங்கம் கூடுதல் நடைமுறைகளைஅ அரசாங்கம் அறிவித்துள்ளது ;
- 60 வயதுக்கு மேல் கொண்டவர்களும் சினோவக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஆகியோர் தங்களின் கூடுதல் ஊக்கத் தடுப்பூசியை பிப்பரவரி 2022 செலுத்திக் கொண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது நிறைவடைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- யூ.கே. நாட்டில் இருந்து மலேசியா வந்தடைந்தவர்கள் தனிமைப்படுத்தலின் போது நாள்தோறும் சுய பரிசோதனை செய்து அதனை மைசெஜாத்தெரா செயலியில் பதிவு செய்ய வேண்டும். தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்ட பயணிகள் 7 நாட்களும் தடுப்பூசி முழுமையடையாதவர்கள் 10 நாட்களளும் தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும்.
- ஆபத்து அதிகமான நிறைந்த நாடுகள் பாட்டியலில் நைஜிரியா உட்பட சில நாடுகள் இணைக்கப்படும்.
- மீண்டும் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் திறக்கப்பட உள்ளன.


