Homeமலேசியாவெதுப்பிகள் விலை உயர்வு : விளக்கமளிக்க மசிமோ அழைப்பு !

வெதுப்பிகள் விலை உயர்வு : விளக்கமளிக்க மசிமோ அழைப்பு !

பெட்டாலிங் ஜெயா | 2/1/2022 :-

மசிமோ வெதுப்பிகள் விலை உயர்வு குறித்து விளக்கமளிக்க அதனை வெளியீடு செய்யும் தெ இத்தாலியன் பேக்கர் நிறுவனம் உள்நாட்டு வாணிபம், பயனீட்டாளர் விவகார அமைச்ழால் அழைக்கப்பட்டுள்ளதாக அதன் துணை அமைச்சர் ரோசோல் வாஹிட் தெரிவித்தார்.

வெள்ளப் பேரிடராலும் கோவிட்-19 பெருந்தொற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த விலை அதிகரிப்பு நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யும் என அவர் சொன்னார்.

இந்த விலை அதிகரிப்புக்கானக் காரணம் குறித்து அந்நிறுவனம் விளக்கமளிக்க அழைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த திசம்பர் 1 முதல் மற்றொரு வெதுப்பி நிறுவனமான கார்டினியாவும் அதன் வெளியீடுகளின் விலையை உயர்த்தி இருந்தது. இரு நிறுவனங்களும் இவ்விவகாரம் குறித்து விளக்கமளிக்க அழைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தங்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு இருக்கும் மூலப் பொருட்களின் விலை உயர்வால் அதன் வெளியீட்டுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு காரணமாகக் கூறப்பட்டது.

அந்தக் காரணத்தை ஏற்றுக் கொண்ட அமைச்சு, கார்டினியாவின் பழைய விலையில் விற்கப்பட ஒரு புதிய வெதுப்பியை வெளியிட ஒப்புதல் வழங்கி இருப்பதாகக் கூறிய அவர். அதே பரிந்துரையை மசிமோ நிறுவனத்திற்கும் தாம் கொடுப்பதாக ரோசோல் குறிப்பிட்டார்.

சாதாரன வெள்ளை ரொட்டிகளின் விலையை மட்டுமே அரசாங்கம் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அதனை வெளியிடும் நிறுவனம் விலையை உயர்த்த வேண்டும் என்றால், அமைச்சிடம் முன்னரே தெரிவிக்க வேண்டும்.

மற்ற ரொட்டிகளின் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை.

எனவே, இவ்விவகாரம் குறித்து அனைத்துத் தரப்பினருக்கும் சாதகமான முடிவை எடுக்க அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாக ரோசோல் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more