Homeசமூகம்வெள்ளப் பேரிடரில் சிக்கி தவிக்கும் மெந்தகாப் மக்களுக்கு பேரின்பம் உதவி

வெள்ளப் பேரிடரில் சிக்கி தவிக்கும் மெந்தகாப் மக்களுக்கு பேரின்பம் உதவி

கோலாலம்பூர், ஜன. 3-

வெள்ளப் பேரிடரில் சிக்கி தவிக்கும் மெந்தகாப் வட்டார மக்களுக்கு பேரின்பம் மலேசிய இயக்கத்தினர் முயற்சிகள் உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர் மழையின் காரணமாக மெந்தகாப் சுற்றுவட்டாரத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.வெள்ள நீர் வற்றியுள்ள நிலையில் வீடுகளை சுத்தம் செய்யும் பணிகளின் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிப்பில் இருக்கும் அப்பகுதி மக்களை பேரின்பம் மலேசியா இயக்கத்தினர் சந்தித்ததுடன் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினர்.

பேரின்பம் மலேசியா இயக்கத்தின் ஆலோசகர் யு. தாமோதரன், பகாங் மாநில தலைவர் வாசுதேவன், நெகிரி மாநில துணைத் தலைவர் குணாளன், கூட்டரசுப் பிரதேச தலைவர் தனபாலன், தலைமை செயலாளர் குபேரன், கோம்பாங் தொகுதி முன்னாள் மஇகா தலைவர் சுகுமார், நடப்பு தலைவர் கோபிராஜ் உட்பட பலர் அப்பகுதி மக்களுக்கு உரிய உதவிகளை செய்தனர்.

மெந்தகாப் சுற்றுவட்டாரத்தில் வாழும் மக்கள் அடிக்கடி வெள்ளப் பிரச்சினை சிக்கி தவிக்கின்றனர். இந்த வெள்ளப் பிரச்சினையில் இருந்து அப்பகுதி மக்கள் விடுப்பட அரசாங்கங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதே வேளையில் 500க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களை நேரடியாக சந்தித்து உதவிப் பொருட்களை வழங்க பகாங் மாநில தலைவர் வாசுதேவன் பெரும் உதவியாக இருந்தார்.அவருக்கும் அவரின் குழுவினருக்கும் இவ்வேளையில் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக யு. தாமோதரன் கூறினார்.

spot_img

latest articles

explore more