Homeமலேசியாவெள்ளப் பேரிடர் : மரண எண்ணிக்கை 54 ! இருவரை இன்னும் காணவில்லை !

வெள்ளப் பேரிடர் : மரண எண்ணிக்கை 54 ! இருவரை இன்னும் காணவில்லை !

கோலாலம்பூர் | 5/1/2022 ;-

வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட சில மாநிலங்களில் 54 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இருவரை இன்னும் காணவில்லை.

இது குறித்து தகவல் அளித்த புக்கிட் அமான், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் ஹஸானி கஸாலி தெரிவிக்கயில், வெள்ளப் பேரிடரால் சிலாங்கூர் மாநிலத்தில் 25 பேர், பகாங் மாநிலத்தில் 21 பேர், கிளாந்தான் மாநிலத்துல் 4 பேர், சபாவில் மூவர், நெகிரி செம்பிலானில் ஒருவரும் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் பகாங் மாநிலத்தில் இன்னும் இருவரைக் காணவில்லை எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, 7 மாநிலங்களில் 172 தற்காலிகத் துயர்துடைப்பு மையங்களில் 3,989 குடும்பங்களைச் சேர்ந்த 13,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஹஸானி கூறினார்.

spot_img

latest articles

explore more