Homeஅரசியல்உண்மையைச் சொன்னதால் 14வது பொதுத் தேர்தலில் விளைவுகளைச் சந்தித்தேன் ! – நஜிப்

உண்மையைச் சொன்னதால் 14வது பொதுத் தேர்தலில் விளைவுகளைச் சந்தித்தேன் ! – நஜிப்

கோலாலம்பூர் | 7/1/2022 :-

கடந்த 14வது பொதுத் தேர்தலின்போது தாம் உண்மையை உரைத்ததால் அதன் பின்விளைவைச் சந்தித்ததாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் அவர் பிரதமராக இருந்த போது, நம்பிக்கைக் கூட்டணி அறிவித்தது போல டோல் கட்டணத்தை ஒழிப்பதுல் பொட்ரோல் விலையைக் குறைப்பது போன்ற சில வாக்குறுதிகளைக் கொடுக்க முடியாத நிலையில் தாம் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மக்களிடம் உண்மையைச் சொல்வதா அல்லது வெற்று வாக்குறுதிகளைக் கொடுப்பதா என்ற முடிவு எடுக்க வேண்டியக் கட்டாயத்தில் தாம் இருந்ததாகக் கூறிய நஜிப், உண்மையைச் சொல்லி விடுவதே மேல் எனத் தாம் முடிவெடுத்ததாகத் தெரிவித்தார்.

பிடிபிடிஎன் கடன், டோல் கட்டணத்தை முழுமையாக அகற்றி விட முடியாவே முடியாது. பெட்ரோல் விலையை ரிம 1.50 ஆகக் குறைக்க முடியாது. BR1M உதவித் தொகையை ரிம 2,000 ஆக உயர்த்துவது, பொருள் சேவை வரிக்குப் பதிகால விற்பனை சேவை வரியை விதிப்பது போன்றவை நிச்சயமாக முடியாது.

மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதன்படி, ஒரு பிரதமராக மக்களிடம் நான் உண்மையைப் பேச வேண்டும். மக்களிடம் பொய் சொல்ல முடியவில்லை. ஆனால், விளைவு . . . ?

கோலாலம்பூர் புத்ரா பன்னாட்டு வாணிப மையத்தில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் சந்திப்புக் கூட்டத்தில் நஜிப் அவ்வாறு குறிப்பிட்டார்.

நம்பிக்கைக் கூட்டணி போல மக்களுக்கு மனக் கோட்டைக் கட்டும் பொய்யான வாக்குறுதிகளை தேசிய முன்னணியின் தலைவராகத் தம்மால் கொடுக்க முடியாது என பெக்கான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவர் அந்தச் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார்.

60 ஆண்டு கால தேசிய முன்னணியின் ஆட்சியை கடந்த 14வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றியது.

முன்னதாக, பல ஊழக் குற்றச் சாட்டுகளையும் அதிகார முறை கேடல் குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தின் சந்தித்தார்.

நான் மக்களிடத்தில் உண்மையைச் சொல்லி இருக்கிறேன் என்பதை வரலாறு சொல்லும். அதனால் தான், என்னால் நிம்மதியாக உறங்க முடிகிறது.

 ஆனால், நம்மை எதிக்கின்றத் தரப்போ (நம்பிக்கைக் கூட்டணி) பொய் சொல்லி இருக்கிறார்கள் இதைத் தான் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கிறீர்களா என அவர் கேள்வி எழுப்பினார்.

spot_img

latest articles

explore more