Homeமலேசியாகூவா மூசாங்கில் புலியால் தாக்கப்பட்ட பூர்வக்குடி ஆடவர் பலி !

கூவா மூசாங்கில் புலியால் தாக்கப்பட்ட பூர்வக்குடி ஆடவர் பலி !

கூவா மூசாங் | 8/1/2022 :-

இங்குள்ள போஸ் பிஹாய் பகுதியில் உள்ள கம்போங் சௌவில் பூர்வக் குடி ஆடவர் ஒருவர் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அளித்த கூவா மூசாங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சூப்ரிடெண்டண்ட் சிக் சூன் ஃபூ, பலியான அவ்வாடவர்ரின் பெயர் அனேக் பின் ஆலோங் எனவும் அவருக்கு 59 வயது மிக்கவர் எனக் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குறித்து தமது தரப்புக்கு கிளாந்தான் மாநில தேசியப் பூங்கா, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரியிடம் இருந்து தகவல் கிடைத்ததாக அவர் சொன்னார். அத்தகவல் பூர்வக் குடிமக்கள் மேம்பாட்டு திணைக்களத்தினரிடம் உறுதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

தமது தரப்பிக்குக் கிடைக்கப்பெற்றத் தகவலின்படி, காலை 9.10 மணி அள்வில் பலியான அவ்வாடவர் வீட்டின் பின்புறத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றதாகவும் அவரின் மகள் அரிசியைக் குத்திக் கொண்டிருந்ததாகவும் சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.

நேரமாகியும் வராததால், தமது தந்தையைப் பல முறை அழைத்திருக்கிறார். வீட்டின் பின்புறத்தில் சென்று பார்த்த பொழுது அங்கு இரத்தக் கறை இருந்ததைப் பார்த்து அண்டை அயலாரை கூச்சலிட்டு அழைத்துள்ளார். தேடிப் பார்த்தபோது, தமது தந்தையின் சடலத்தின் பக்கத்தில் புலி ஒன்று இருந்ததாக சிக் சூன் ஃபூ கூறினார்.

அப்புலியை ஈட்டியைக் கொண்டு ஊர் மக்கள் தாக்கியதாகவும் அது புலியின் முகத்தில் காயத்தை ஏற்படுத்தியதாகவும் நம்பப்படுகிறது.

தகவல் பெற்ற கூவா மூசாங் காவல் நிலைய அதிகாரிகள் சடலத்தை வெளியில் கொண்டு வந்தௌ கூவா மூசாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல மாலை 5.40 மணி அளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இது குறித்து கூடுதல் தகவல் அளித்த பெர்ஹிலித்தான் கிளாந்தானின் இயக்குநர் முகம்மட் ஹாஃபிட் ரோஹானி, அந்தப் புலிக்கு 3 வயது எனவும் அது 120 கிலோ எடை கொண்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், அது மற்றொரு அதிகாரிடைத் தக்க முற்படும்போது நண்பகல் 12.15 மணி அளவில் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் சொன்னார்.

அதிகாரிகளைக் காப்பாற்ற அந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010 (சட்டம் 716) பிரிவு 52 இன் பட, மனித உயிருக்கு ஆபத்து விளைவித்த மிருகத்தை அவ்வாறு செய்ய முடியும் எனவும் அவர் சொன்னார்.

spot_img

latest articles

explore more