ஜோகூர் பாரு | 13/4/2022 :-
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், சைக்கிளில் சென்ற எட்டு இளைஞர்களை மோதி மரணம் விளைவித்த பெண்ணுக்கு ஜோகூர் பாரு உயர்நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திதுள்ளது.
அதோடு,6000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றத்தைப் புரிந்த 27 வயதுடைய சாம் கே டிங் அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதோடு, தண்டனை காலம் முடிந்தப் பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்படும் என்று நீதிபதி டத்தோ அபு பாகார் காத்தார் உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவிப்பதற்கும் விடுதலை செய்வதற்கும் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருதது
நீதிமன்றம் சம்பந்தப்பட்ட தரப்பு வாதங்களை கணக்கில் எடுத்துக்கொண்ட நிலையில், தண்டனை விதிப்பதில் தனிப்பட்ட நலன்களை விட பொது நலனுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


