Homeமலேசியாஅமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றுவோம்: டத்தோஸ்ரீ எம். சரவணன்

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றுவோம்: டத்தோஸ்ரீ எம். சரவணன்

வாஷிங்டன், மே 16-

அமெரிக்காவின் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களில் முன்னோடியான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தை முழுமையுமாக அறிந்துக் கொள்ள இந்த பயணம் வழிவகைச் செய்ததாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார். அதோடு தமது மகிழ்ச்சியையும் அவர் வெளிப்படுத்தினார்.

முன்னதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் HRDCorp, நிர்வாகம் தொடர்பான கூட்டுறவை மேற்கொள்ளும் என்று சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.

உலகளாவிய தரவரிசையில் முதல் 20 பல்கலைக்கழகங்களில் பால்டிமோரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் (JHU)ஒன்றாகும்.

அந்தப் பல்கலைக் கழகத்தின் நிர்வாக திட்டங்களையும் அனுபவங்களையும் மனிதவள அமைச்சின்கீழ் இயங்கும் HRDCORP நிறுவனத்தோடு இணைந்து மலேசியாவிற்கு கொண்டு வர, JHU உடன் நெருக்கமாக செயல்பட, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது பொதுத்துறை ஊழியர்களுக்கும் HRDCORP மூலம் JHU நிர்வாகத் திட்டங்களை அணுகுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். இந்த கூட்டத்தில் மனிதவள மேம்பாட்டு கழகத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ ஷாஹுலும் உடனிருந்தார்.

HRDCORP மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகதிற்கும் (JHU) இடையே நிர்வாகத் திட்டங்களை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு கொள்கைகள் குறித்து மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் நேற்று அறிவித்தார். அமெரிக்க பல்கலைக்கழக ஒத்துழைப்பு பயன் அளிக்கும் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more