பெட்டாலிங்ஜெயா, மே 31-

தனது தொகுதி மக்கள் காய்கறி சந்தை, பேரங்காடி உட்பட சுற்றுவட்டாரத்தில் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்புவதற்கு ஏதுவாக -புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிக்ஷாகரன் சிறப்பு கட்டணத்தில் போக்குவரத்து சேவையை ஏற்பாடு செய்துள்ளார்.

இச்சேவை இவ்வட்டார மக்களின் தேவையை நிறைவேற்றுவதற்கு புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் மேற்கொண்டிருக்கும் புதிய முயற்சியாகும் என்று ஜ.செ.க.தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கும் பொருட்டு ராஜிவ் இத்தகு சிறப்பு போக்குவரத்து சேவையைத் தொடங்கியிருப்பதாக இச்சேவையில் ஈடுபட்டிருக்கும் ‘கும்பூல்’ எனும் வேனை அறிமுகப்படுத்துகையில் குறிப்பிட்டார்.

பொது மக்கள் தங்கள் கார்களில் செல்வதைத் தவிர்க்கும் அதே வேளையில் அவர்கள் கார்களை நிறுத்துவதற்கான இடத்தைத் தேடுவதில் ஏற்படும் சிரமத்தையும் இது குறைக்கும் என்று ராஜிவ் தெரிவித்தார்.

“ புக்கிட் காசிங் சட்டமன்ற அலுவலகத்தின் இந்த வேன் மூலம் செல்வதற்கு 1 வெள்ளி திரும்புவதற்கு 1 வெள்ளி என்று மிகவும் குறைந்த கட்டணத்தில் பெட்டாலிங் ஜெயா சுற்று வட்டார பகுதிகளுக்குச் சென்று திரும்பலாம் “ என்றார் அவர்.

இதன் மூலம் தங்கள் நேரத்தையும் மக்கள் மிச்சப்படுத்தலாம் என்று அவர் மேலும் சொன்னார்.