ரிம10,000 ரொக்கப் பரிசை வெல்வதோடு ஒரு டெலிமூவித் தயாரிக்கும் வாய்ப்பைப் பெறுங்கள்

‘உலகம் குறும்படப் போட்டியைப்’ பற்றிய விபரங்கள்

  • இப்போதிலிருந்து ஜூலை 31, 2022 வரை நடைப்பெறும் உலகம் குறும்படப் போட்டியில் பங்கேற்று ரொக்கப் பரிசுகளையும் ஒரு டெலிமூவித் தயாரிப்பதற்கான வாய்ப்பையும் பெற அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகின்றனர்.
  • பங்கேற்க்க விரும்பும் போட்டியாளர்கள் பின்வறுபவற்றைச் செய்ய வேண்டும்:
  • அசல் 20-நிமிடத் தீபாவளிக் கருப்பொருளைக் கொண்டக் குறும்படம் மற்றும் அதன் போஸ்டரை ஏதாவது இந்திய மொழியில் தயாரிக்க வேண்டும்.
  • மேலும்⦁ astroulagam.com.my/shortfilmcontest என்ற அகப்பக்கத்தின் வாயிலாகப் பங்கேற்ப்பாளர்கள் போட்டிக்கான நுழைவுப் படிவத்தைப் பூர்த்திச் செய்து, குறும்படம் மற்றும் போஸ்டரை அங்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • வெற்றியாளர்கள் அசல் தன்மைப், படைப்பாற்றல், நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங், வசனம் மற்றும் திரைக்கதை ஆகியவற்றின் அடிப்படையில் நடுவர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுப், பின்வரும் பரிசுகளை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.
  • முதல் நிலை வெற்றியாளர் ரிம10,000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வதோடு ஆஸ்ட்ரோவில் திரையிடப்படும் ஒரு டெலிமூவியைத் தயாரிப்பதற்கான அறிய வாய்ப்பைப் பெறுவார்.
  • இரண்டாம் நிலை வெற்றியாளர் ரிம8,000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வார்.
  • மூன்றாம் நிலை வெற்றியாளர் ரிம6,000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வார்.
  • ஏழு ஆறுதல் பரிசு வெற்றியாளர்கள் தலா ரிம3,000 ரொக்கப் பரிசுகளை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.
  • மேல் விபரங்களுக்கு, ஆஸ்ட்ரோ உலகத்தின் ⦁ அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.