Homeமலேசியாகோழியின் உச்சவரம்பு விலை RM9.40 முட்டை 45 சென்! அமைச்சர் அறிவிப்பு

கோழியின் உச்சவரம்பு விலை RM9.40 முட்டை 45 சென்! அமைச்சர் அறிவிப்பு

புத்ராஜெயா, ஜூன் 29-

கோழியின் புதிய உச்சவரம்பு விலை ஒரு கிலோ கிராம் RM9.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று டத்தோஶ்ரீ டாக்டர் ரொனால்ட் கியான்டி தெரிவித்துள்ளார்.

விவசாயம், உணவுத் தொழில்துறை அமைச்சரான அவர், ஏ தர முட்டைகளின் சில்லறை விலை தலா 45 சென்னாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் பி தரம் 43 சென், சி தரம் 41 சென் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய விலை வெள்ளிக்கிழமை (ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது.

தீபகற்ப மலேசியாவில் கோழிக்கான உச்சவரம்பு விலை முன்பு கிலோ ஒன்றுக்கு RM8.90 என நிர்ணயிக்கப்பட்டு, ஜூலை 1-ஆம் தேதி நீக்கப்பட்டது.

மலேசியக் குடும்பம் உதவித் திட்டத்தைக் கருத்தில் கொண்டு அமைச்சரவையும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டத்தோஶ்ரீ டாக்டர் ரொனால்ட் கியான்டி சுட்டிக் காட்டினார்.

spot_img

latest articles

explore more