Homeசமூகம்ஈப்போ அருள்மிகு ஓம்காரி அம்மன் ஸ்ரீ மஹா சக்தி ஆலயத்தின் 50 ஆம் ஆண்டு...

ஈப்போ அருள்மிகு ஓம்காரி அம்மன் ஸ்ரீ மஹா சக்தி ஆலயத்தின் 50 ஆம் ஆண்டு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வருகை

ஈப்போ, ஜூலை 12-

இங்குள்ள புந்தோங் தெலுக் குரின் அருள்மிகு ஓம்காரி அம்மன் ஸ்ரீ மஹா சக்தி ஆலயத்தின் 50 ஆம் ஆண்டு திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.இந்த ஆலய திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, இத்திருவிழாவில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.குலசேகரன், தேசிய அரசு குடும்பம் பாதுகாவலர்கள்  சங்கம் தலைவர், டத்தோ ஷர்மா, பினாங்கிலிருந்து சியா கோக் ஹெங், கிந்தா வட்டார சமூகநல, விளையாட்டு, கலை பண்பாட்டு இயக்கம் தலைவர், பி.யுவராஜன், எம்.சி.ஐ.எஸ் கோவிந்தராஜு உட்பட பலர் சிறப்பு வருகை புரிந்தனர்.

இந்த ஆலயத்தை என் பெற்றோர்கள் வழி நடத்தினர். தந்தைக்கு பின்னர் நான் நடத்துகிறேன். முன்புலிருந்து பக்தர்கள் நினைத்த காரியம் நடக்கும். அதனாலே ஆலயம் பெயர் ஓம்காரியம்மன். அதே வேளை, நம் ஆலயத்தில் பேச்சையம்மன் வழிப்பாடு சிறப்பு வாய்ந்தது. பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அம்மன் அருள் புரிவார் என்று ஆலயத் தலைவர் பரமேஸ்வரன் என்ற மோகன் குறிப்பிட்டார்.

கோவிட்டினால்   நாம் கடந்த  ஆண்டுகள் திருவிழா நடைபெறவில்லை. இந்த வருடம் மீண்டும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.  சுற்று வட்டார மக்கள் ஆலயத்திற்கு பெரும் ஆதரவு வழங்குகின்றனர் என்றார்

ஆலயத் திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்திலிருந்து இரதம் புறப்பட்டது.

spot_img

latest articles

explore more