திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > ’சசிகலாவையே மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை!’ டி.டி.வி.தினகரன்
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

’சசிகலாவையே மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை!’ டி.டி.வி.தினகரன்

சென்னை, செப்.23-

‘அக்டோபர் 1-ம் தேதிக்குப் பிறகு, நோய்த்தொற்று ஏற்படும் என்பதால், ஜெயலலிதாவைப் பார்க்க சசிகலாவையே மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை’ என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் குடகுப் பகுதியில், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்திப்பதற்காக, டி.டி.வி.தினகரன் நேற்று கர்நாடகா மாநிலம் சென்றிருந்தார். அவர்களைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில், தீர்ப்பு எங்களுக்கே சாதகமாக வரும். இங்கு தங்கியிருக்கும் அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதே இலக்கு.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்தாலும், இறுதியில் வெற்றி எங்களுக்கே கிடைக்கும். நீதி தேவதையின்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. பெரும்பான்மை வாக்கெடுப்பு நடைபெற்றால், ஆட்சி கவிழும். ஆட்சி கவிழ்ந்தபின் வரும் தேர்தலில், நாங்கள் பெரும் வெற்றிபெறுவோம். கட்சித் தொண்டர்களுக்கும் மக்களுக்கும், நடக்கும் உண்மைகள் முழுவதும் தெரியும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்குப் பதில்சொல்லி, நான் தரம் தாழ்ந்துபோக விரும்பவில்லை. கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்ட நிர்வாகிளை மாற்றி, அவர்களது விவரங்களைத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளேன். அ.தி.மு.க அம்மா அணியின் சார்பாக பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்படும்” என்று தெரிவித்தார்.

’ஜெயலலிதாவை பார்த்துப் பேசியதாகப் பொய் சொன்னோம்’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதைப் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தினகரன், ’பயத்தால் அமைச்சர்கள் மாறி மாறிப் பேசுகிறார்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதவிக்காகத்தான் இப்படிப் பேசுகிறார்’’ என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன