ஓர் அமைப்பானது முறையே வகுக்கப்பட்டுள்ள கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் கெஅடிலான் கட்சியும் நமக்கு அரசியலமைப்பில் தெளிவாக வகுக்கப்பட்டுள்ள சட்டவிதிகளுக்கு உட்பட்டு அனைத்து மலேசியர்களுக்கும் நீதி – நியாயம் பற்றிய கருத்துகளை எடுத்துரைத்து வருகிறது.

அனைத்து உறுப்பினர்களும் வாக்களிப்பதற்கும், வேட்பாளர்களாக தங்கள் நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கும் உள்ள ஜனநாயக உரிமை அதே அரசியலமைப்பின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. இந்தக் கட்சியின் உறுப்பினர்கள் என்ற வகையில், அரசியலமைப்பிற்கு உட்பட்ட அதிகாரங்களைப் புரிந்துகொள்வதும் மதித்து நடப்பதும் அடிப்படையாகும்.

கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு, பிகேஆர் மத்திய தலைமைக் குழுவின் (எம்பிபி) உறுப்பினர்களை தானே நியமனம் செய்யும் அதிகாரம் இருந்தாலும், அவர் தனது ஞானத்தின் மூலம் அதை எடைபோடுவார். உறுப்பினர்கள் என்ற வகையில், ஒற்றுமை உணர்வுடன் தலைவரின் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து நமது அமைப்பின் சுமூகமான இயக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள இந்த உரிமையை கேள்விக்குட்படுத்துவதற்கு நமது சார்புநிலையை அனுமதித்தால் அது நல்ல நடத்தையும் நாகரீகமும் இல்லாததாகும். தலைவரின் எந்தவொரு நியமனமும் அந்த வேட்பாளரின் பங்களிப்பின் தகுதியினால் மதிப்பிடப்பட வேண்டும், அது கட்சிக்கு முழு நன்மையையும் அளித்திருப்பதை கவனிக்க வேண்டுன்.

சரஸ்வதி கந்தசாமி, ஜி.மணிவாணன், ஆர்.உவனேஸ்வரன் ஆகியோரை நியமிக்க எம்பிபி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவானது, கட்சிக்கு அம்மூவரும் ஆற்றியுள்ள அர்ப்பணிப்புகளையும் பங்களிப்புகளையும் கட்சி அங்கீகரித்திருப்பதை பிரதிபலிக்கிறது. வாருங்கள், நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம், வரும் பொதுத் தேர்தலுக்கு பிகேஆரை தயார் செய்வோம்.

மாண்புமிகு குமரேசன் ஆறுமுகம்
பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர்