பெட்டாலிங் ஜெயா, ஜூலை 28-

மோட்டார் சைக்கிளோட்டும் உரிமத்தை பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 16 இருந்து 21ஆக உயர்த்தும் நடவடிக்கையை அரசு முன்னெடுக்க வேண்டுமென போக்குவரத்து ஆலோசகர், ரொஸ்லி அஸாட் கான் வலியுறுத்தினார்.

16 வயது என்பது மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான மிகக் குறைந்த வயதாகும் என்பதால் இந்தக் கொள்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

அதோடு, அதற்குப் பதிலாகப் பள்ளிப் பேருந்து சேவை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2014 ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை மலேசியாவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்த ஓட்டுநர்கள், பின்னால் அமர்ந்திருப்பவர்கள் எண்ணிக்கை 25,958 என பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து புக்கிட் அமான் போக்குவரத்து அமலாக்கம், விசாரணைத் துறை வெளியிட்ட அண்மைய புள்ளி விவரம் தொடர்பில் பத்திரிகையாளர்களிடம் ரொஸ்லி அஸாட் கான் கருத்துரைத்தார்