பெட்டாலிங் ஜெயா, ஜூலை 28-
சில தினங்களாகப் பெய்த அடைமழை மற்றும் பலத்த காற்றில் இங்குள்ள விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் கூரைகள் பறந்தன. இதனால் பள்ளியில் வெள்ளம் புகுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலை மாணவர்களின் கல்விக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இதற்குத் தீர்வு காணும் வகையில் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ் ரிஷாகரன் இப்பள்ளிக்கு நேரடி வருகை புரிந்தார்.

புயல் காற்றில் பறந்து விழுந்து கிடக்கும் கூரை

பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் பள்ளி மேலாளர் வாரியத்தினருடன் ரஜீவ் பேச்சு நடத்தினார்.

பகுதி உதவி பெற்ற இப்பள்ளியின் கூரைகள் விரைவில் சீரமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

பெட்டாலிங் ஜெயாவில் பிரசித்தி பெற்ற தமிழ்ப்பள்ளி விவேகானந்தா தமிழ்ப்பள்ளி என்பது குறிப்பிடப்பட்டது.