ஈப்போ, ஆக. 2-

ஒரு காலத்தில் மண்ணின் மைந்தர்கள் திரைப்படத்தின் டிக்கெட்டுகளை வாஙகவே ரசிகர்கள் யோசிப்பார்கள்.ஆனால் நேற்று முன் தினம் செந்தோழன் செங்கதிர்வாணன் திரைப்படம் ஈப்போ ஸ்ரீ கிந்தா திரையரங்கில் வெளியீடு கண்டபோது முதல் நாளே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

அந்த திரைப்படத்தின் டிக்கெட்டுகள் முதல் நாள் முதல் காட்சியிலேயே விற்று முடிந்தன.ரசிகர்கள் தற்போது உள்ளூர் படங்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றணர் என்பதற்கு இதுவே ஆதாரம்.

இந்த திரைப்படத்தின் முதல் காட்சிக்கு இயக்குனர் கோவிந் சிங், நடிகர்கள் கேஷ் வில்லன், மூன் நிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் சிறப்பு பிரமுகர்களாக ஸ்டீவன், காஜன் வில்லன்ஸ், வேல் முருகன், கவிதா செட்டி, யுவராணி கிருஷ்ணன் ஆகியோர் வருகையளித்து ஆதரவு வழங்கினர்.

உள்ளூர் திரைப்படங்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஈப்போ மீடியா ஆதரவாளர்கள் கிளப் தலைவர் ஐ.எம்.எஸ் செல்வா மற்றும் மகேந்திரா படத்தின் முதல் காட்சியை ஈப்போ சுடலைக்காளி குழுவினரின் (எஸ்.டி.கே) தப்பு மேள இசையோடு மெருகூட்டினர்.