காஜாங், ஆக.4
காஜாங் நகராண்மைக் கழகத்திடமிருந்து (எம்.பி.கே.ஜே.) புதிய விகிதத்திற்கான நோட்டிசைப் பெற்ற குடியிருப்பாளர்களில் பெரும்பாலானோர் தங்களின் வருத்தத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியது மட்டுமின்றி ஒருவேளை ஏற்புடைய எதிர்ப்பு ஏதேனும் இருந்தால் அதைப் பரிசீலிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பில் உள்ளூர் அரசு சட்டம், 137(3)ஆவது பிரிவுக்கு ஏற்ப சிலாங்கூர் மாநில ரீதியிலான புதிய பரிந்துரை மற்றும் எதிர்ப்பு மதிப்பீட்டுப் பட்டியலை சரிபார்ப்புச் செயல்முறையாகத் தயார் செய்ய ஒரு புதிய மதீப்பீட்டு பட்டியல் எதிர்ப்பு செவிமடுப்புக் கூட்டத்தை எம்.பி.கே.ஜே.வின் சொத்து மதிப்பீட்டு மற்றும் நிர்வாகத் துறை ஏற்பாடு செய்தது.

137(3)ஆவதுப் பிரிவின்படி துணைப்பிரிவு (1)இல் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் விவரங்களைக் கொண்டுள்ள ஒரு புதிய மதிப்பீட்டுப் பட்டியல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது மாநில அமலாக்க தரப்பினர் நிர்ணயித்ததைப் போல் நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் தயார் செய்யப்பட வேண்டும். இருந்த போதிலும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் மாநில அரசின் அறிக்கைகளின்படி தற்போதைக்கு எந்த கட்டண உயர்வும் அமல்படுத்தப்படாது.

இதனிடையே, இந்த சரிபார்ப்பு நடவடிக்கை கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட விகித உயர்வை மறு மதிப்பீடு செய்வதற்கு ஆகும் என்று எம்.பி.கே.ஜே. உறுப்பினர், ராமச்சந்திரன் அர்ஜுனன் தெரிவித்தார். இந்த மதிப்பீடு உண்மையில் ஒரு வழக்கமான நடைமுறைதான். இதை எம்.பி.கே.ஜே. அமல்படுத்த மாநில அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் தேவைப்படுகிறது. இதை வேண்டுமென்றே அமல்படுத்தவும் முடியாது. இதை அமல்படுத்துவதற்கு முன்பு மதிப்பீடு செய்யப்பட்ட சில அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுவது உட்பட இதில் பல்வேறு நடைமுறைகள் கையாளப்படும் என்று ராமச்சந்திரன் அர்ஜுனன் குறிப்பிட்டார்.
Attachments area