ஈப்போ, ஆக. 4

இங்குள்ள தாமான் மேரு , ஜெலாப்பாங்கில் அமைந்துள்ள அருள்மிகு மகா காளியம்மன் ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு காலையில் பக்தர்கள் பால் குடம் ஏந்தி தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர். அம்மன் அருளை மனதில் நிறுத்தி, பக்தர்கள் நேர்த்திக் கடன்களைச் சிறப்பாக் நிறைவேற்றினர்.

தொடரந்து அம்மனுக்கு விஷேஷ பூஜை நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழா உபயத்தை ராணாயிரம் – விஜயலட்சுமி ஏற்றுக் கொண்டனர்.

இதனிடையே, ஆலயத்தின் திருவிழாவிற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் ஆலயத் தலைவர், ஆர்.முனுசாமி நன்றியை தெரிவித்துக் கொண்டார்.திருவிழா மறுநாள் ஆலயத்திலிருந்து இரத ஊர்வலம் புறப்பட்டது.