ஈப்போ, ஆக. 4

இங்குள்ள ரிஷா ராயாவில் அமைந்துள்ள மைதானத்தில் மரங்கள் நடுவதற்கு எதிராக குடியிருப்பாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

கால்வாய்கள் பெரும் சேதமாகும் என்ற அச்சத்திலும் பிள்ளைகள் விளையாடும் மைதானத்தில் மரங்கள் நடக் கூடாது என்றும் தாமான் ரிஷா குடியிருப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.இவ்விவகாரம் தொடர்பில் தாமான் ரிஷா குடியிருப்பாளர் சங்கம் ஈப்போ மாநகர் மன்றத்திற்குக் கடிதம் அனுப்பியது.

எனினும், மாநகர் மன்றம் இதனைப் பொருட்படுத்தாமல் அந்த மைதானத்தில் மரம் நடும் பணிகளைத் தொடர்ந்ததாக இச்சங்கத்தின் தலைவர்
பி.ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் காலை மரங்கள் நடும் பணிகள் தொடங்குவதைக் கண்ட அங்குள்ள மக்களும் ஜெயபிரகாஷும் ஜெலப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ் ஹியானிடம் இது குறித்து தகவல் கூறினர்.