Homeகுற்றவியல்தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட முயன்ற ஆடவனுக்கு போலீஸ் வலைவீச்சு

தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட முயன்ற ஆடவனுக்கு போலீஸ் வலைவீச்சு

காஜாங், ஆக.9-

பலாக்கோங், தாமிங் ஜெயாவில் கடந்த வாரம் சனிக்கிழமை ஒரு பெண்மணியின் சங்கிலியைக் கொள்ளையிட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவனை போலீஸ் தீவிரமாகத் தேடிக் கொண்டிருப்பதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர், ஏ.சி.பி. முகமட் ஸையிட் ஹாசான் தெரிவித்தார்.

அன்றைய தினத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமது பெரோடூவா அல்ஸா ரக காரை நோக்கி இப்பெண் சென்றுக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஓர் ஆடவன் அப்பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட முயன்றான். இருந்த போதிலும் முயற்சி தோல்வியுற்றது.

இச்சம்பவம் அங்கிருந்த ஒரு வாகனத்தின் டாஷ்போர்டு கேமராவில் பதிவுச் செய்யப்பட்டது.
கேமரா பதிவைப் பார்த்த போது அடையாளம் தெரியாத நீல நிர மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஓர் ஆடவன் அப்பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைக் கோப்புத் திறக்கப்பட்டு 393ஆவதுக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனால் இச்சம்பவம் தொடர்பானத் தகவல்களைத் தெரிந்தவர்கள் வாக்குமூலம் கொடுக்க முன்வரும்படி அழைக்கப்படுகின்றனர். அல்லது 019-2299906 என்ற எண்ணில் இன்ஸ்பெக்டர் நோர் லைலா கைருடினைத் தொடர்புக் கொள்ளலாம் என்று ஓர் அறிக்கையில் ஏ.சி.பி. முகமட் ஸையிட் ஹாசான் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more