Homeமலேசியாமலேசியா இந்தியர் சமூகநலன அபிவிருத்தி இயக்கத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்

மலேசியா இந்தியர் சமூகநலன அபிவிருத்தி இயக்கத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்

பெட்டாலிங் ஜெயா, ஆக 9-
எதிர்வரும் 28ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி முதல். மாலை 6.00 மணி வரை பாலாய் ராயா செக்ஷன் 17/1ஏ, பெட்டாலிங் ஜெயா சிலாங்கூர் என்ற முகவரியில் இந்த இரத்த தான முகாம் நடைபெற உள்ளது.

இந்த இரத்த தான முகாமில் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர், மாண்புமிகு ராஜீவ் ரிஸ்யக்காரன் அவர்கள் கலந்து கொள்கின்றார்.மலேசியா இந்தியர் சமூகநல அபிவிருத்தி இயக்கமும், தேசிய இரத்த தான வங்கியும் இணைந்து இந்த முகாமை ஏற்பாடு செய்திருக்கின்றன என்று இயக்கத்தின் தலைவர், டாக்டர் கே. எஸ்.பாஸ்கரன் தெரிவித்தார்.

பொதுமக்கள் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு இரத்த தானம் வழங்குவது மிகச் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகின்றது. தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம் ஆகும். நமது சமுதாயம், நமது கடமை என்ற எண்ணம் கொண்டு நமது சேவையின் வழி பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.

அதே வேளையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும் இரத்தம் தேவைப்படுகிறது. ஆகவே சுற்று வட்டாரப் பொது மக்கள் இந்த இரத்த தான முகாமில் கலந்து கொண்டு தங்களின் பொதுநல நடவடிக்கைகள் வெற்றி பெற உதவும்படி சமூக சேவையாளருமான டாக்டர் கே.எஸ். பாஸ்கரன் அன்போடு கேட்டு கொள்கிறார்.

இந்த இரத்ததான முகாம் தொடர்பாக மேல் விபரங்கள் தேவைப்படுவோர் டாக்டர் கே.எஸ். பாஸ்கரன் (017-6378384), இராமன் (018-3195963), முத்தழகன் (014-6636707) ஆகியோரைத் தொடர்புக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

spot_img

latest articles

explore more