*நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை

திங்கள், 19 செப்டம்பர்

ஒரு கலைஞனின் டைரி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ரவின் ராவ் சந்திரன், கவிதா சின்யா &  கிருத்திகா நாயர்

ஒரு சமயத்தில், போதைப்பொருட்களுக்கு அடிமையாகிய இருண்டப் பக்கத்தைக் கொண்டிருந்தாலும் உள்ளூர் கலைத்துறையில் புகழ்பெற்ற இசையமைப்பாளராகத் தடம் பதிக்க வேண்டும் என முயற்சிக்கும் வருண் என்ற ஆர்வமுள்ள இசையமைப்பாளரைப் பற்றியக் கதை.

வணக்கம் டாக்டர் (புதிய அத்தியாயம்21)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 9 மணி, திங்கள் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்: டாக்டர் புனிதன் ஷான்

இவ்வார அத்தியாயத்தில், டாக்டர் வைத்தியலிங்கம், சைவ உணவின் நன்மைகள் பற்றிய விபரங்களைப் பகிர்வார்.

வியாழன், 22 செப்டம்பர்

ஜின்னே ஜம்மே சாரே நிகம்மே (Jinne Jamme Saare Nikamme) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சுண்டி, ஜஸ்விந்தர் பல்லா, புக்ராஜ் பல்லா, பின்னு தில்லான், சீமா கௌஷல் & சத்வந்த் கவுர்

ஒரு வயதானத் தம்பதிகள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்க முடிவுச் செய்கின்றனர். ​​அவர்களது மகன்கள் ஐந்தாவது உடன்பிறப்பை வரவேற்பதைத் தவிர்ப்பதற்காக அவர்களது பெற்றோரைப் பிரித்து வைப்பதற்கான ஒரு பெருங்களிப்புடைய திட்டத்தை உருவாக்குகின்றனர்.

வெள்ளி, 23 செப்டம்பர்

பேட்டரி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்: செங்குட்டுவன்

சந்தேகப்படும்படியாக ஒருவரைப் பிடித்து, காவல்துறையினர் கொடூரமாக விசாரிக்கும்போது, ​​அவர் இதயநோயாளி என்பதைக் கண்டுபிடித்த ஒருவர் அவரைக் காப்பாற்றுகிறார்.

திங்கள், 26 செப்டம்பர்

ஒரு கலைஞனின் டைரி (புதிய அத்தியாயங்கள்5 – 8)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ரவின் ராவ் சந்திரன், கவிதா சின்யா &  கிருத்திகா நாயர்

வருணின் தந்தை அவன் வகுப்புகளைத் தவறவிட்டதையும், கல்விக் கட்டணம் செலுத்தாததையும் கண்டுபிடித்தார்.

வணக்கம் டாக்டர் (இறுதி அத்தியாயம்22)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 9 மணி, திங்கள் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்: டாக்டர் புனிதன் ஷான்

இவ்வார அத்தியாயத்தில், இருதயநோய் நிபுணரான டாக்டர் ஷதீஷ்குமார், இருதய நோய் மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விபரங்களைப் பகிர்வார்.

வியாழன், 29 செப்டம்பர்

12’ ஒ கிலோக் (12’O Clock) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: மிதுன் சக்ரவர்த்தி, புளோரா சைனி, மானவ் கௌல், கிருஷ்ணக் கௌதம் & மகரந்த் தேஷ்பாண்டே

ஓர் இளம் பெண், கௌரிப் பயமுறுத்தும் கனவுகள் மற்றும் வினோதமானத் தூக்கத்தில் நடக்கும் சம்பவங்களால் அதிர்ச்சியடையத் தொடங்குகிறாள்.

வெள்ளி, 30 செப்டம்பர்

நாரதன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்: டொவினோ தாமஸ்

ஊடக உலகில், தனதுத் தகுதியை நிரூபிக்கத் துடிக்கும் பிரபலச் செய்தித் தொகுப்பாளரானச் சந்திரபிரகாஷின் வியத்தகுப் பயணம்.