கோலாலம்பூர், செப். 23-
மலேசிய இந்தியர்கள் பெருந்திட்டம் 2.0- வின் முக்கிய அங்கமான கல்வி சார்ந்த, தமிழ்ப்பள்ளி மற்றும் தமிழ்க்கல்வி மாநாடு இன்று நடைபெற்றது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது இயக்கங்கள், சமுதாயத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இந்தியப் பெருந்திட்டம் என்பது ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கான உருமாற்றமாக இருக்க வேண்டும். அதற்கு அடிப்படையாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழு அமைத்து நிகழ்கால பிரச்சனைகளையும், எதிர்கால சவால்களையும் கண்டறிய வேண்டும்
என்று மஇகா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
இந்திய சமுதாயத்திற்கான உருமாற்றம் வேண்டும் என்றால் ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒற்றுமை மிக மிக முக்கியம் என்றார் மனித வள அமைச்சருமான அவர்.

