தைப்பிங் செப் 29
வின்சர் தோட்டத் தொழிலாளர்களின் அமைதி மறியல் எட்டாவது நாளாகத் தொடர்கிறது.
இந்தத் தோட்டத்தில் பணி ஓய்வு பெறும் தொழிலாளர்கள் வெளியேற்றப்
படுவதை கண்டித்து தொழிலாளர்கள் இந்த அமைதி மறியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இத்தோட்டத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறும் போது அவர்கள் குடியிருக்க வீட்டுடமைத் திட்டம் உருவாக்கபடவேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இருந்தபோதும் பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களை தோட்ட நிர்வாகம் சட்டப பூர்வமாக நீதிமன்ற உத்தரவைப் பெற்று வெளியேற்றி வருகிறது.
இது வரை மூவர் வெளியேற்றப்பட்டனர். இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் தொழிலாளர்கள் அமைதி மறியலில் ஈடுபட்டு வருகிறார்ரகள்.
இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தோட்ட மக்களை சந்தித்த மாநில ம.இ.கா தலைவர் டத்தோ வ. இளங்கோ , பி. எஸ் . எம் . கட்சி துணைத் தலைவர் சு. அருள் செல்வன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்திற்கு தீர்வு காண தொழிலாளர் வீட்டுடமைத் திட்டம் உருவாக்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

