புத்ராஜெயா, அக் 20 –
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தல் வரும் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சாலே தெரிவித்தார்.
முன்கூட்டியே வாக்களிக்கும் நாள் நவம்பர் 15 ஆம் தேதி என்றும் அவர் கூறினார்.
இத்தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என்றும் அப்துல் கனி குறிப்பிட்டார்.
அதே சமயம், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு 14 நாட்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் விவரித்தார்.


