Homeஅரசியல்இளம் வாக்காளர்கள் விவேகமாக வாக்களிக்க வேண்டும்

இளம் வாக்காளர்கள் விவேகமாக வாக்களிக்க வேண்டும்

  • கஜேந்திரன் வலியுறுத்தல்

கோத்தாராஜா, நவ.6-

மலேசிய அரசியல் வரலாற்றில் புதிய ஈசரித்திரத்தைப் படைக்கும் 15ஆவது பொதுத்தேர்தலில் இளம்
வாக்காளர்கள் விவேகமான முறையில் வாக்களிக்க வேண்டும் என்று கோத்தா ராஜா நாடாளுமன்றத்
தொகுதி தேசிய முன்னணி வேட்பாளர் கஜேந்திரன் வலியுறுத்தினார்.

18 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினர் முதன்முதலாக இத்தேர்தலில்
வாக்களிக்கவுள்ளனர்.அரசியல் அனுபவம் ஏதுமில்லாத இளம் தலைமுறையினரின் வாக்கு மிக
முக்கியமானதாக இத்தேர்தலில் கருதப்படுகிறது.

முகநூல், டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தும் இளைஞர்கள் அதில் வரும்
பரப்புரைகளின் உண்மைத் தகவலை அறிந்து செயல்படுவது ஆக்கப்பூர்வமானதாகும். எந்தவொரு
தகவலானாலும் அதன் உண்மைத் தன்மையை தீர விசாரித்து விவேகமாகச் செயல்பட வேண்டும்.

ஆளும் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது.14ஆவதுப்
பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் எடுத்த தவறான முடிவு கடந்த 4 ஆண்டுகளாக நிலையில்லாத
ஓர் அரசியல் சூழலை நாட்டில் உருவாக்கியது. அத்தகைய ஒரு சூழல் மீண்டும் ஏற்படாமல் இருக்க
இளம் வாக்காளர்களின் முடிவு நாட்டின் வளப்பத்திற்கு அச்சாரமாக அமைந்திட வேண்டும் என்று
கஜேந்திரன் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more