புக்கிட் காசிங் சட்டமன்றத்தின் பொங்கல் திருநாள் கொண்டாட்டம்

241

பெட்டாலிங் ஜெயா, ஜன.16-
புக்கிட்காசிங் சட்டமன்ற அலுவலகம் ஏற்பாடு செய்த பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தில் சுற்று வட்டார மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

நேற்று மாலை மணி 5 தொடங்கி இரவு மணி 7.00 வரை பெட்டாலிங் ஜெயா, ஜாலான் டெம்ளர், விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் இந்தப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது..

புக்கிட்காசிங் சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ் ரிக்க்ஷாக்கரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொங்கல் விழாவில் நகராண்மைக்கழக உறுப்பினர் கவின் தயாளன் சிறப்பு வருகை புரிந்தார்..

இந்தப் பொங்கல் விழாவிற்கு மயிலாட்டம், கோலாட்டம், உரிமி மேளம், உரி அடித்தல் போன்ற பாரம்பரிய நடன மற்றும் விளையாட்டுகள் சிறப்புச் சேர்த்தன.

பொங்கல் வைப்பதிலும், இதர விளையாட்டுகளிலும் அனைவரும் மிக உற்சாகமாகப் பங்கேற்றது பொங்கல் கொண்டாட்டத்திற்கு மெருகூட்டியது.

நிகழ்ச்சியின் இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரஜீவ் பரிசுகளை வழங்கினார்.