Homeசமூகம்புற்றுநோயால் அவதியுறும் காயத்ரிக்கு உதவுவீர்! –டாக்டர் செல்வேந்திரன் வேண்டுகோள்

புற்றுநோயால் அவதியுறும் காயத்ரிக்கு உதவுவீர்! –டாக்டர் செல்வேந்திரன் வேண்டுகோள்

கோலாலம்பூர், ஜன.30-
புற்றுநோயால் அவதியுற்று வரும் காயத்ரியின் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதியுதவியை வழங்கும்படி பொது மக்களை புதிய தலைமுறை முற்போக்கு அமைப்பின் தலைவர் டாக்டர் செல்வேந்திரன் கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

மிகவும் சிரமமான சூழலில் வாழும் இக்குடும்பத்தினரால் மகள் காயத்ரியின் மருத்துவ சிகிச்சைக்கான நிதியை திரட்ட இயலவில்லை என்பதால் இக்குடும்பத்தினர் பொது மக்களின் உதவியைப் பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

இக்குடும்பத்தினரின் நிலையைக் கேள்வியுற்று புதிய தலைமுறை முற்போக்கு அமைப்பினர்  செந்தூலில் உள்ள காயத்ரியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரின் தாயாரிடம் வீவரங்களைக்
கேட்டறிந்ததாக செல்வேந்திரன் குறிப்பிட்டார்.

குடும்பச் சூழல், காயத்ரியின் உடல் நிலை ஆகியவற்றைத் தெரிந்து கொண்ட பின்னர் தங்களால் இயன்ற நிதியை காயத்ரியின் தாயாரிடம் தாங்கள் ஒப்படைத்ததாக அவர்  கூறினார்.


காயத்ரி விரைவில் சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏதுவாக  நிதியுதவி வழங்கும்படி நல்லுள்ளங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

உயர் கல்வி பெற்ற காயத்ரி பூரண குணமடைந்து சிறந்த எதிர்காலத்தைப் பெற அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்றார் அவர்.


மேல் விவரங்களுக்கு  விஜயலெட்சுமியுடன் (காயத்ரியின் தாயார்) 014-7593991  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..இவரின் பப்ளிக் பேங்க் வங்கி எண் :6896444113.

spot_img

latest articles

explore more